சவூதியினால் துரத்தப்பட்ட கட்டார் ஒட்டகங்கள் - பட்டினியாலும், தாகத்தாலும் பரிதாபமாக பலி
கட்டாருடனான இராஜதந்திர முறுகல் காரணமான சவூதி அரேபியா கட்டார் நாட்டு ஒட்டகங்களை வெளியேற்றியதை அடுத்து நூற்றுக்கணக்கான ஒட்டகங்கள் பட்டினி மற்றும் தாகத்தால் இறந்துள்ளன.
இரு நாட்டு எல்லையில் சில விலங்குகள் போதிய உணவு, நீர் இன்றி சிக்கிக்கொண்டுள்ளன. ஒட்டக உரிமையாளர்களை ஒரு மணி நேரத்திற்குள் நட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட நிலையில் மேலும் சில ஒட்டகங்கள் வீதி ஓரங்களில் இறந்த நிலையில் காணப்படுகின்றன.
சவூதி 9,000க்கும் அதிகமான கட்டார் உரிமையாளர்களின் ஓட்டகங்களை 36 மணி நேரங்களில் நாட்டை விட்டு வெளியேற்றியது. கட்டார் கால்நடைகள் சவூதியின் மேய்ச்சல் நிலங்களையே பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அபூ சம்ராவைச் சேர்ந்த ஓட்டக உரிமையாளர் ஒருவரான ஹுஸைன் அல் மர்ரி குறிப்பிடும்போது, “நான் சவூதி அரேபியாவில் இருந்து திரும்பினேன். வீதியில் 100க்கும் அதிகமான இறந்த ஒட்டகங்களையும், வீடுபட்ட நூற்றுக்கணக்கான ஓட்டகங்கள், ஆடுகளையும் கண்டேன்” என்றார்.
தனது 50 ஆடுகள் மற்றும் ஐந்து ஒட்டகங்கள் இறந்ததாகவும் 10 காணாமல் போய்விட்டதாகவும் மற்றொரு பண்ணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment