சிறிலங்காவின் நுளம்புக்கடியிலிருந்து, பாதுகாப்புத் தேடுங்கள் - அமெரிக்கா
சிறிலங்கா செல்லும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சிறிலங்காவில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டே இந்தப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் டெங்கு நோயினால் 250 பேர் மரணமாகியுள்ளனர் என்றும் 103,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
சிறிலங்காவில் தீவிரமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
அத்துடன், டெங்கு நோயினால் பாதிக்கப்படக் கூடிய மேலும் அதிகளவு நோயாளர்களை கவனிக்கக் கூடிய ஆற்றலை அதிகரிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய் நுளம்புகள் மூலம், பரவுவதால், சிறிலங்காவுக்குச் செல்லும், பயணிகள், நுளம்புக்கடியில் இருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும்.
டெங்கு தொற்றை தடுக்கக் கூடிய தடுப்பு மருந்துகள் எதுவும் அமெரிக்காவில் இல்லை என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment