அமெரிக்கா - கட்டார் ஒப்பந்தம், கட்டாரை நம்பமுடியாது என்கிறது சவூதி அரேபியா..!
பயங்கரவாதத்துக்கு நிதி ஆதரவு வழங்குவதற்கு எதிராக, அமெரிக்காவும், கட்டாரும் செய்துகொண்ட ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என கட்டாருடன் உறவை துண்டித்துக் கொண்ட 4 வளைகுடா நாடுகள் தெரிவித்துள்ளன.
டோஹாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் நேற்று கட்டாருடன் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
எனினும் இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என சவுதி அரச செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.
கட்டார் அதிகாரிகளின் அனைத்து விதமான நிதியுதவி மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் ஏனைய 4 வளைகுடா நாடுகளும் தீவிர கண்கானிப்புகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டார் அதிகாரிகளின் வாக்குறுதிகள் நம்பமுடியாதவைகள் எனவும், இது முந்தைய உடன்படிக்கைகளை அடிப்படையாக கொண்டு கூறப்படவில்லை எனவும் சவுதி அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய டோஹா மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவது குறித்து தீவர கண்கானிப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment