Header Ads



இப்படியும் நடக்கிறது

மாமி மலம் கழித்­த­தற்­காக வெளியே இழுத்து தள்­ளிய மரு­மகள்; மரண நிதிக்­காக உயி­ரி­ழந்த தாயின் சட­லத்தை கோரும் மகன்!

தனது தாய் உயி­ருடன் இருக்­கும்­போது அவ­ருக்கு உதவி செய்­யாத நப­ரொ­ருவர், அந்தத் தாய் உயி­ரி­ழந்­ததன் பின்னர் மரண நிதி­ய­மாக தனது நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­படும் கொடுப்­ப­னவு தொகையை பெற்றுக் கொள்­வ­தற்­காக அவ­ரது பூத­வு­டலை கேட்டு, இதுநாள் வரை தாயை கவ­னித்து வந்த தனது சகோ­த­ரி­யிடம் சண்­டை­யிட்ட சம்­ப­வ­மொன்று கல்­க­முவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கல்­க­முவ, மஹ எம்­போ­கம பிர­தே­சத்தை சேர்ந்த மேற்­படி தாய், சில காலம் நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த நிலையில் உயி­ரி­ழந்தார். நோய்­வாய்ப்­பட்­டி­ருந்த தாய், அவ­ரது இளைய மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில் நோயாளி மாமி­யாரை கவ­னித்துக் கொள்­வ­தற்கு அரு­வ­ருப்­பாக உள்­ள­தாக கூறி இளைய மகனின் மனைவி கூறி­யுள்ளார்.

இவ்­வா­றி­ருக்­கையில் ஒரு நாள் குறித்த தாய் படுக்­கையில் மலம் கழித்­த­மைக்­காக அவ­ரது மரு­மகள் அவரை வீட்­டி­லி­ருந்து வெளியே இழுத்து தள்­ளி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து அத் தாய், மஹவ, நெத்­திப்­ப­ல­கம பிர­தே­சத்­தி­லுள்ள தனது மகளின் வீட்­டுக்கு தனி­யாக சென்­றுள்ளார். அதன்­போது அவர் கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்­டி­ருந்­த­மை­யினால் அவ­ரது மகளால் சிகிச்­சை­ய­ளித்து அர­வ­ணைக்­கப்­பட்டார். எனினும் ஐந்து பிள்­ளை­களின் தாயான அவரை ஏனைய பிள்­ளைகள் நலம் விசா­ரித்­த­துடன்  உத­வி­களை செய்­தி­ருந்த போதிலும் அவரின் இளைய மகனும், மூத்த மகனும் தாய் தொடர்பில் எவ்­வித கரி­ச­னையும் காட்­டி­யி­ருக்­க­வில்லை.

இந்­நி­லையில், அண்­மையில் மகளின் வீட்டில் வைத்து தாய் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் அவ­ரது மூத்த மகன், இளைய மகன் ஆகியோர் தாயின் சட­லத்தை தமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்­டு­மெனக் கூறி சகோ­த­ரி­யுடன் சண்­டை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

பின்னர் மறுநாள் காலையில் திரும்­பி­வந்த மேற்­படி சகோ­த­ரர்கள் சட­லத்தை கோரி­யி­ருந்­த­போது சகோ­தரி சட­லத்தை தர மறுத்­ததால் முறுகல் நிலை ஏற்­பட்­டி­ருந்­த­துடன் அச்­ச­கோ­த­ரிக்­காக பரிந்து பேசி­வந்த பெண்­ணொ­ரு­வரை உயி­ரி­ழந்த பெண்ணின் இளைய மரு­மகள் காய­ம­டையும் அள­வுக்கு தாக்­கி­யுள்ளார். அதன்­போது காய­ம­டைந்த பெண் குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

No comments

Powered by Blogger.