Header Ads



நுளம்பு கடியிலிருந்து பாதுகாக்கும், முஸ்லிம் சீருடை - ஏற்க மறுக்கிறார் விசாகா அதிபர்

-ஏ.எல்.எம். சத்தார்-

டெங்கு நோய் நுளம்புக் கடி­யி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­காக நீண்ட கை, காற் சட்­டை­களை அணி­யு­மாறு கல்­வி­ய­மைச்சர் பாட­சாலை மாணவ மாண­வி­க­ளுக்கு வழங்­கி­யுள்ள ஆலோ­ச­னையை தனது பாட­சா­லையில் அனு­ம­திக்கப் போவ­தில்­லை­யென்று கொழும்பு விசாகா வித்­தி­யா­லய அதிபர் கூறியுள்ளார். 

மேற்­படி நீள­மான கால்­சட்டை முஸ்லிம் மாண­வி­களின் சீரு­டையை ஒத்­தி­ருப்­ப­தா­லேயே தன்னால் மேற்­படி சீருடைத் திட்­டத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­துள்­ள­தாக அவர் தனது கருத்தை முன்­வைத்­துள்ளார்.

மேற்­படி பாட­சா­லையில் இடம்­பெற்ற கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றும்­போதே அதிபர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புக் கடி­யி­லி­ருந்து மாணவ, மாண­வி­களைத் தற்­காத்துக் கொள்­வ­தற்­காக நீள­மான கை, காற்­சட்டை சீரு­டையை அணியும் ஆலோ­சனை ஒன்றை கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் கல்­வி­ய­மைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் முன்­வைத்­தி­ருந்தார். இதற்கு மறுப்புத் தெரி­விக்கும் வகை­யி­லேயே விசாகா வித்­தி­யா­லய அதிபர் தனது பாட­சாலை கூட்டம் ஒன்றில் மேற்­படி கருத்தை வெளி­யிட்­டுள்ளார்.

இவ்­வி­டயம் குறித்து சிங்­கள ஊடகம் ஒன்று மேற்­படி அதி­ப­ரிடம் கேள்வி எழுப்­பி­ய­போது முஸ்லிம் பிள்­ளை­களின் சீரு­டையை போன்று அணி­வதை தமது பாட­சா­லையில் அங்­கீ­க­ரிக்க முடி­யா­தென்றும் இதற்குப் பிர­தி­யீ­டாக பாட­சா­லைக்குள் மாத்­திரம் வழ­மை­யான சீரு­டை­யுடன் அதற்குக் கீழ் பகு­தியில் பாட­சாலைப் பிள்­ளைகள் அணியும் டையின் நிறத்தில் நீள­மான காற்­சட்­டையை அணிய தம் பாட­சாலை மாண­வி­களைக் கேட்டுக் கொண்­டுள்­ள­தா­கவும் அத்தகைய மேலதிக காற்சட்டையை பாடசாலைக்கு வெளியே அணிய வேண்டாம் என்றும் தான் ஆலோசனை வழங்கியதாக குறித்த அதிபர் ஊடகவியலாளரிடம் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. utter fool how become a teacher

    ReplyDelete
  2. Climax of racism from principle?

    ReplyDelete
  3. No common sense. Shame on you (principal)

    ReplyDelete
  4. மலம் திண்ட நாய் ஒரு நாளைக்கு ஒரு களஞ்சி மலமாவது திண்ணா விட்டால் தலை வெடித்துவிடுமாம் அதே போல்தால் இவளின் கதை அவனுக்கு இவனுக்கு காட்டி பழகிய கூட்டம் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும் ,இல்லாட்டி தலை வெடித்துவிடும்,

    ReplyDelete
  5. This is not a matter of Islam. Mosquitoes won't bother about the cast or religion, whether Muslim or Sinhalese or Tamil. Don't play with the innocent lives of Children.

    ReplyDelete
  6. Dear Anton....

    thanks a lot for your "CIVILIZED" RACISM...! but it makes no sense of wisdom, only stupidness!

    ReplyDelete

Powered by Blogger.