ஜனாஸா நல்லடக்க விவகாரம் - தவ்ஹீத் ஜமாஅத் மீது தாக்குதல்
தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை செயலாளரின் சகோதரர் ஜனூஸ் அவர்கள் விபத்தொன்றில் சிக்கி (21.07.2017) மரணமடைந்தார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
குறித்த சகோதரர் மரணிப்பதற்கு முன்பாக “நான் மரணமடைந்தால் நபி வழிப்படிதான் என்னை நல்லடக்கம் செய்ய வேண்டும்” என்று தவ்ஹீத் ஜமாஅத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு அமைவாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கல்குடா கிளை சார்பாக நபி வழிப்படி ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளின் படி இஸ்லாம் காட்டிய வழிமுறையில் ஜனாஸா நல்லடக்கம் இறுதிக் கட்டம் வரை அமைதியாக சென்று கொண்டிருந்த வேலையில், சிலர் மரணித்த ஜனூஸ் அவர்களின் சகோதரரையும் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களையும் கடுமையாக தாக்கினார்கள்.
குர்ஆனுக்கும் நபி வழிக்கும் உட்பட்டு ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதை சகித்துக் கொள்ள முடியாமல், இஸ்லாத்திற்கு மாற்றமான பித்அத்தான முறையில் ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியே குறித்த தாக்குதலில் ஈடுபட்டார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஜமாஅத்தின் பேச்சாளர் சகோ. ஸலாஹுத்தீன் மவ்லவி அவர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணித்த சகோதரர், மரணிப்பதற்கு முன்னர் வைத்த கோரிக்கைபடி குர்ஆன் சுன்னா அடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) சார்பில் சிறப்பான முறையில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. – அல்ஹம்துலில்லாஹ்
-Rasmin Mowlavi -
-Rasmin Mowlavi -
Post a Comment