Header Ads



திருமணம் முடிக்கவுள்ள, இளைஞர்கள் ஜாக்கிரதை...!

-Rizan Zain-

நல்ல மாப்பிள்ளை ஒன்று இருக்காரு என்று கேள்விப்பட்டு, ஒரு குடும்பத்தார் பலர் மூலம் மாப்பிள்ளை வீட்டிற்கு தூதும் விட்டார்கள். நல்ல குடும்பம் என்று அவர்கள் நம்பியதிலும் பொய் இல்லை. அவர்கள் மாப்பிள்ளையைப் பார்க்கவும் அவசரப்பட்டார்கள். அப்போது மாப்பிள்ளை கொழும்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மாப்பிள்ளையின் பொடோவைக் கேட்டார்கள். அது கைவசம் இருக்ககவில்லை.

மாப்பிள்ளையின் மூத்த சகோதரன் மாப்பிள்ளையின் புகைப்படங்களை அவரது FB யில் பார்க்கலாம் என்று FB யின் முகவரியை நல்லெண்ணத்தில் அவர்களுக்கு வழங்கியுள்ளார். பெண் வீட்டார் ஆசையோடும் ஆர்வத்தோடும் முகநூலைத் தேடிப்பிடித்து, ஒருவாறு மாப்புவின் செல்பிகளையும் விதம் விதமாக முகத்தை சுளித்து, நாக்கை நீட்டி பல்வேறு சுற்றுலாக்களில் எடுத்த புகைப்படங்களையும் பார்த்துள்ளனர். சுவாரஷ்யம் என்னவென்றால் மாப்பிள்ளை "ஒரு ஊர் சுத்தி " எண்டும் "ரஸ்தியாது type" எண்டும் முடிவுக்கு வந்து, அந்த சம்பந்தத்தை கைவிட்டுள்ளார்கள்.

திருமணம் முடிக்க ஆசை ஆசையாக வண்ண வண்ணக் கனவுகளில் இருக்கும் இளைஞர்களே...! 

இது உங்களுக்குத்தான். போடுற பொடோக்களை கொஞ்சம் டீஸன்டா போடுங்கப்பா. Status களையும் கவனமாகப் பதிவேற்றுங்க மக்காள். எல்லா பொண் வூட்டாக்களும் இப்படியே யோசிச்சா உங்கட status ஆலயிம் photos ஆலயும் உங்கட fb யின் Relationship Status ல எப்போதும் Single என்றே போட வேண்டியிருக்கும். அந்தக் கவலையில் எழுதுறேன் வாப்பா. புரிஞ்சா சரி!😂😂😂
#மாப்புக்கு_ஓர்_ஆப்பு.

No comments

Powered by Blogger.