வட மாகாண சபை, குத்தாட்டம் போடும் இடமா..?
வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் "வந்ததற்கு பாட்டாவது பாடி விட்டு போவோம்" என கூறியதை அடுத்து சபையில் சிரிப்பொலி எழும்பியிருந்தது.
வடமாகாண சபையின் 98வது அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவைக் கட்டிடத்தில் அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில், நடைபெற்றது.
இதன்போது மாகாண சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய தெரிவுக்குழு ஒன்றினை அமைத்து மாகாண சபையின் ஐந்து அமைச்சுக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டது.
எனினும், குறித்த பிரேரணையில் சில திருத்தங்கள் மேற்கோள்ள வேண்டும் என தெரிவித்து அவைத்தலைவர் சபையை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், உறுப்பினர்கள் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. இன்றைய சபை அரை மணி நேரத்துடன் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதே என தெரிவித்து உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதன் போது, ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன் வேடிக்கை சபை என தெரிவித்ததுடன், "வந்தனாங்க, வந்தவுடன் போகாமல், வந்ததற்கு இரண்டு பாட்டாவது பாடி விட்டு செல்வோம்" என சபையில் தெரிவித்தார்.
இதனையடுத்து சபையில் சிரிப்பொலி எழும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment