Header Ads



டெங்கு நோயைக் கட்டுப்படுத்த, புதியவகை மருந்து கண்டுபிடிப்பு - ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவ நிபுணர்கள் சாதனை

(தினகரன்)

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் புதிய வகை மருந்தொன்றைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் மருத்துவ நிபுணர்கள் குழு வெற்றி கண்டுள்ளது.

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மத்தியில் திரவமொன்று கசிந்து பரவுவதை இந்தப் புதிய மருந்து தடுக்கும் எனத் தெரியவந்துள்ளது.

அலர்ஜிக்ைகக் கட்டுப்படுத்தும் 'ருப்பரெடைன்' (Rupatadine) என்ற இந்த மருந்தைப் பரிசோதனை செய்ததில், சாதகமான பெறுபேறு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் டெங்கு ஆய்வுப்பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் நீலிக்கா மாலவிகே தெரிவித்துள்ளார்.

டெங்கு வைரசால் பீடிக்கப்பட்ட நோயாளிக்குக் காய்ச்சல் ஏற்படுவதை இந்த மருந்து குறைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் டெங்கினால் ஏற்படும் உயிராபத்து தடுக்கப்படும்.

அங்கொடையில் உள்ள தொற்று நோய் ஆஸ்பத்திரியில் இந்த மருந்தின் முதலாவது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் வெற்றி கிட்டியுள்ளது. இரண்டாவது பரிசோதனை வெளி நோயாளர் பிரிவில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது பரிசோதனையில் 183 நோயாளர்களிடமிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு மற்றும் அரச முகவர் அமைப்புகளின் ஆசிர்வாதத்துடனேயே இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகப் பேராசிரியை மாலவிகே மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, டெங்கு நோயினால் இதுவரை சுமார் ஒரு இலட்சம் ​பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் (​ெவள்ளி வரை) முன்னூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.