தேங்காயை இறக்குமதி செய்யும், பரிதாப நிலையில் சிறிலங்கா
தேங்காய் கொள்கலன் ஒன்றை பரீட்சார்த்த அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு சிறிலங்காவின் பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.
உள்ளூரில் உற்பத்தியாகும் தேங்காய், தேவைக்குப் போதுமானளவில் இல்லாததாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்த அடிப்படையில், உரிக்காத- நாருடன் கூடிய புதிய தேங்காய்களைக் கொண்ட கொள்கலன் இறக்குமதி செய்யப்படும் என்றும், இதன் பெறுபேற்றின் அடிப்படையிலேயே இறக்குமதி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றும் பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவைக் குழு தெரிவித்துள்ளது.
தீவு நாடாக இருந்தும், மீன்களை இறக்குமதி செய்யும் சிறிலங்கா தற்போது, தேங்காய் இறக்குமதியில் இறங்கியுள்ளதாகவும், தேயிலை இறக்குமதி எப்போது ஆரம்பிக்கும் என்று பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
தெங்குப் பொருள் ஏற்றுமதி சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதிகளில் ஒன்றாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment