வாய் பேசமுடியாத சிறுவனுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்த சத்திரசிகிச்சை வெற்றி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வாய் பேசமுடியாத சிறுவன் ஒருவனை பேச வைப்பதற்கான சத்திர சிகிச்சை புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. ஏறாவூரைச் சேர்ந்த சிறுவனுக்கே இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் காது மூக்கு தொண்டை வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ஜீவதாஸ் தலைமையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்தியர்கள் குழு இந்த சத்திர சிகிச்சையை மேற் கொண்டது.
பிறப்பிலிருந்தே வாய் பேசமுடியாத இந்த சிறுவனுக்கு பேச வைப்பதற்கான இந்த சத்திர சிகிச்சை ஆறரை மணித்தியாலயங்கள் நடைபெற்றதுடன் வெற்றிகரமாக இந்த சத்திர சிகிச்சை மேற் கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இந்த சிறுவனுக்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏறாவூர் முக்கியஸ்தரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான நசீர் ஹாஜியார் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டிருந்தார்.
இந்த சத்திர சிகிச்சையை வெளியில் தனியார் வைத்திய சாலையில் செய்வதாயின் பல இலட்சம் ரூபா செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment