'டொக்ஸொரின் கைட்ஸ்' நுளம்புகளை, நாடுபூராகவும் பறக்கவிட திட்டம்
நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலைமையில் நாடளாவிய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயாளர் கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 230 பேர் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் வைத்தியசாலைகளிலும் டெங்கு நோயாளர்கள் நிறைந்து காணப்படுவதுடன் இட நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக் கள் பரவலாக எழுந்துள்ள நிலையில் அரசாங்கம் புதுவிதமான திட்டமொன்றை தற்போது நாட்டில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.
அதாவது டெங்கு நுளம்புகளை உணவாக எடுத்துக் கொள்ளும் மற்றுமொரு உருவத்தில் பெரிய அளவிலான நுளம்பு வகையை சூழலில் உலாவ விடுவதன் மூலம் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் சார்பில் வைத்திய நிபுணர் சாகரிக்கா சமரசிங்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பரிசோதனை மிகவும் பரபரப்பின்றி மௌனமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது. இதில் நாங்கள் விளம்பரத்தை தேடவில்லை. நாம் பரிசோதனையின் நிமித்தம் இந்த நுளம்புகளை பல்வேறு பிரதேசங்களில் உலாவ விட்டோம். இருளுக்கு சாபம்விடாமல் மெழுகு திரியொன்றையாவது கொளுத்த வேண்டும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையிலேயே இதனை நாங்கள் முன்னெடுக்கின்றோம். நீண்டகால ரீதியில் டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கு இது ஒரு சிறந்த முறையாகும். இந்த மிகப்பெரிய நுளம்பின் பெயர் "டொக்ஸொரின் கைட்ஸ்" ஆகும். இந்த நுளம்பு உருவாகி ஆரம்ப காலத்தில் மட்டுமே டெங்கு நுளம்புகளை உணவாக உட்கொள்ளும்.
அதன் பின்னரும் கூட மனி தனின் இரத்தத்தை உறிஞ்சாது. மாறாக பூவிலுள்ள தேனை உறிஞ்சிக்குடிக்கும். அத்துடன் இலை போன்றவற் றையே உட்கொள்ளும். நுளம்புகளை கொல்லும் நுளம்பு என்றே இதனை ஒருசிலர் அறிமுகப்படுத்துகின்றனர். இதனால் ஒருபோதும் மனிதனை குத்தி இரத்தத்தை குடிக்க முடியாது. காரணம் அதன் கொடுக்கானது முன்பக்கமாக வளர்ந்து பின் பக்கம் திரும்பியிருக்கும். எனவே அதனால் மனிதனைகுத்தி இரத்தத்தை குடிக்க முடியாது என்று வைத்திய நிபுணர் பீ.பீ.சி. செய்திச் சேவைக்கு கூறியிருந்தார்.
தற்போது இந்த நுளம்புகள் பேராதனை தாவரவியல் பூங்கா, மீரிகம குண்டசாலை ஆகிய பிரதேச சூழல்களில் உலாவவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
""எப்படியிருப்பினும் இந்த நுளம்புகளிலிருந்து மட்டும் நாம் டெங்கு நுளம்புகளை அழித்து விட முடியாது. எமது சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அழிப்பதன் மூலமுமே கட்டுப்படுத்த முடியும். இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்டியது அவசியம்" என்றும் மருத்துவஆய்வு நிறுவனத்தில் சார்பில் வைத் திய நிபுணர் சாகரிக்க சமரசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை இது தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேசரிக்கு தகவல் தருகையில்,
கேள்வி : வேறு நாடுகளில் இந்த முறைமை பின்பற்றப்படுகின்றதா?
பதில் : ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. இது வெற்றியும் அளித்துள்ளது.
கேள்வி : இந்த நுளம்புகள் வெளிநாடுக ளிலிருந்தா கொண்டுவரப்படுகின்றன?
பதில் : அவ்வாறு தான் முதலில் எண்ணி னோம். ஆனால் சிங்கராஜ வனத்தில் தேவைக்கு அதிகமாகவே இந்த நுளம்புகள் காணப்படுகின்றன என்றார்.
Post a Comment