Header Ads



தவ­றான வார்த்தைப் பிர­யோகத்தினால், பல­கோடிகளை மண்ணில் புதைக்கும் நிலை - முத்­தலிப்

கழிவுத் தேயிலை என்ற தவ­றான வார்த்தைப் பிர­யோகம் கார­ண­மாக பல­கோடி ரூபா பெறு­ம­தி­யான தேயி­லையை மண்ணில் புதைக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.டி.எம். முத்­தலிப் தெரி­வித்தார். 

மத்­திய மாகாண சபைத் தலைவர் எல்.டி. நிம­ல­சிறி  தலை­மையில் பல்­லே­க­லையில் அமைந்­துள்ள மத்­திய மாகாண சபை கட்­டி­டத்தில் இடம்­பெற்ற மத்­திய மாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-
இலங்­கைக்கு பாரி­ய­ளவு வெளி­நாட்டுச் செலா­வ­ணியை ஈட்டித் தரும் ஒரு துறையே தேயிலைக் கைத்­தொ­ழி­லாகும். தேயிலை ஏல விற்­பனை ஒன்றின் போது 75 இலட்சம் கிலோ தேயிலை ஏலம் விடப்­ப­டு­கி­றது.

நூற்­றுக்கு நூறு சத­வீதம் அந்தத் தேயிலை ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது. இந்த நடை முறை­யின்­படி உள்­ளூரில் பயன்­ப­டுத்­து­வ­தற்கு தேயிலை கிடை­யாது. உற்­பத்­தி­யாகும் அனைத்துத் தேயி­லையும்  ஏலத்தில் விடப்­பட்டு ஏற்­று­மதி செய்தால் நாம் இறக்­கு­மதி செய்­துதான் தேயி­லையை பெற்றுக் கொள்ள வேண்டி வரும். 

வேறு வகையில் சொல்­வ­தாயின் ஏற்றுமதித்தரம் அல்­லா­தவை (ஏற்­று­ம­திக்­கா­னவை அல்­லாத வகை) இவை இரண்டாம் முறை ஏலம் விடப்­பட்டு ஒரு கிலோ­விற்கு 2ரூபா 85 சதம் வரி செலுத்­தப்­பட்டு உள்ளூர் பாவ­னைக்கு விடப்­ப­டு­கி­றது. ஆனால் சட்­டத்தில் ஒரு குறை­பாடு உள்­ளது 500 கிராம் கொண்ட பொதி­க­ளாக அவை கட்­டப்­பட்டே பாதையில் கொண்டு செல்­லப்­பட வேண்டும். அவ்­வாறு 500 கிராம் பொதி செய்­யப்­ப­டாத வற்றை கொண்டு செல்ல அனு­ம­திப்­பத்­திரம் கிடைக்­காது. 

அப்­படி அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி உள்ளூர் தேவைக்கு கொண்டு செல்­லப்­படும் தேயி­லையைக் கைப்­பற்­றிய பின்னர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர். அங்கே கழிவுத் தேயிலை என்ற பதம் பாவிக்கப்படுகிறது. இது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.