Header Ads



பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்­கட்சியுடன், மோதிய விஜயகலா

சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜாங்க அமைச் சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் முன்னாள் ஜனா­தி­ப­தியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தொடர்­பாக வௌியிட்ட கருத்­தாலும் அதனை வாபஸ்­பெற மறுத்­த­மை­யாலும் கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுடன் கடும் சர்ச்சை நிலைமை உரு­வா­னது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை கடற்­தொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்த சட்­ட­மூலம் மற்றும் வணிக கப்பற் தொழில் சட்­டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவா­வ­தத்தில் கலந்து கொண்ட சிறுவர் விவ­கா­ரங்­க­ளுக்­கான இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் உரை­யாற்ற முற்­பட்­ட­போது கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னை­களை எழுப்பி குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­தி­னார்கள். 

இதனால் தனது உரையைத் தொட­ர­மு­டி­யாது சுமார் ஐந்து நிமி­டங்­க­ளுக்கு அதி­க­மாக ஆச­னத்­தி­லி­ருந்து எழுந்து நின்­ற­வாறே இருந்தார். அச்­ச­ம­யங்­களில் தனது உரையைத் தெடர்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் கோரி­ய­வாறு இருந்தார். 

இச்­ச­ம­யத்தில் சபைக்கு தலை­மை­தாங்­கிய திலங்க சும­தி­பால  இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­க­லா­ம­கேஸ்­வ­ரனை பார்த்து நீங்கள் தமிழில் உரை­யாற்­றுங்கள். சபை அமை­தி­யா­கி­வடும். என்று கூறினார். இச்­ச­ம­யத்தில் உரையை தொட­ருங்கள் என்று சுமந்­திரன் எம்.பியும் சைகையால் காட்­டி­விட்டு சபையை விட்டு வௌியே­றினார்.

இத­னை­ய­டுத்து சபை­நி­லை­மைகள் கட்­டுப்­பாட்­டிற்குள் வந்­த­தை­ய­டுத்து வடக்கு மீன­வர்கள், அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள், தொடர்பில் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருந்­தவர் இர­ணை­தீவில் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான பகு­தி­களை விடு­விக்க வேண்­டு­மென கடந்த அர­சாங்­கத்­திடம் கோரினேன். முன்னாள் ஜனா­தி­ப­தியும் இங்கு இருக்­கின்றார். ஆனால் அவர் எத­னையும் செய்­ய­வில்லை எனக் கூறி அவர் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டொன்றை முன்­வைத்து தனது உரையை நிறைவு செய்­தி­ருந்தார்.

இச்­ச­ம­யத்தில் ஒழுங்­குப்­பி­ரச்­சி­னையை எழுப்­பி­ய­வாறு எழுந்த கூட்டு எதிர்க்­கட்சி எம்.பியான காஞ்­சன விஜ­ய­சே­கர, இரா­ஜங்க அமைச்சர் தனது குற்­றச்­சாட்­டிற்­கான ஆத­ரங்கள், எண்­ணிக்­கை­களை வௌியிட வேண்டும். இல்­லையேல் தனது கருத்தை வாபஸ் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். அல்­லது அந்த விட­யங்­களை கன்­சார்ட்­டி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான பரிந்­து­ரையை செய்­கின்றேன் என்றார்.

இத­னை­ய­டுத்து பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால, இரா­ஜங்க அமைச்­சர்ரே நீங்கள் பதில் கூறுங்கள் என்றார்

ஆச்­ச­ம­யத்தில் எழுந்த இரா­ஜங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், உங்­க­ளுக்கு பதில் கூற­வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. மக்கள் உண்­மை­களை அறிந்­துள்­ளார்கள். எங்­க­ளையும் மக்­களே ஆணை வழங்கி அனுப்பி வைத்­துள்­ளார்கள் என்று கூறி­விட்டு கருத்தை வாபஸ்­பெற முடி­யாது எனக் கூறி அமர்ந்து விட்டார். 

இத­னை­ய­டுத்து இரா­ஜங்க அமைச்­சரின் கருத்­துக்­களை மொழிபெயர்த்து சிங்கள மொழியில் கூறுங்கள் என கூறியனார் காஞ்சன எம்.பி. அவர் பதிலளிக்காத நிலையில் அக்கருத்துக்களை கன்சாட்டிலிருந்து நீக்குங்கள் என்று கோரினார். அதற்கமைய அக்கருத்துகள் கன்சாட்டிலிருந்து நீக்கப்படுவதாக பிரதிசாபாநாயகர் திலங்க சுமாதிபால அறிவித்தார்.  

No comments

Powered by Blogger.