Header Ads



நடுவீதியில் நிறுத்தபட்ட அதாஉல்லா

தேசிய காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரும் சமுக ஆர்வலருமான கலாநிதி ரியாஸ் (ஹொலிபீல்ட்) அவர்களின் தாயார் வாபாத்தானர் (இன்னாலில்லாஹி வஹின்ன இலைஹி ராஜூஹூன்)

அவரது இல்லத்துக்கு தேசிய காங்கிரஸ் தலைவர் எ.எல்.எம் அதாஉல்லாஹ் அவர்கள் சென்று திரும்புகின்ற போது வாகன நெருசலான வீதி என்பதால் நானும் இன்னொரு நன்பரும் நடந்து வந்தோம்...
தலைவருடைய வாகனம் சிறுது தூரம் சென்றதும் சிறிய ரக மோட்டார் வண்டியில் வந்த சுமார் 50 வயது மதிக்க தக்க நபர் என்னிடம் இது யாரென கேட்டார் நான் அதாஉல்லாஹ் சேர் என சொன்ன போது வாகனத்தின் ஸ்டாடை ஓப் செய்யமால் நடு வீதியில் நிறுத்தி விட்டு தலைவரின் வாகனத்தை திறந்து "அதாஉல்லாஹ் சேர் உண்மை இப்போதுதான் புரிகிறது " என கட்டி அணைத்தார்.
ஒட்டு மொத்த சமுகத்தையும் பள்ளியையும், மகிந்தவை யும் காட்டி ஏமாற்றி விட்டு எவ்வளவு காலம் இந்த படத்தை இவர்களால் திரையிட முடியும்
அந்த நபரை யாரென்றும் தெரியாது....ஆனால் நடந்த நிகழ்வை நாம் சத்தியமிட்டு எழுதி இருக்கிறோம்.
இதுதான் முஸ்லீம்களின் மனநிலை...இனிக் கூறி திரிய வார்த்தைகள் தேவை இல்லை.
நன்பர்களே!!
அதாஉல்லாஹ் ஆளுனர் ஆவார், எம்.பி ஆவார் என செய்தி வெளியிடுபவர்களும் , ஆகவில்லையாமே என மறுத்துரைப்பவர்களும் மாற்று கட்சி காரர்கள்தான்.
எமது தலைமை உண்மை உரைக்க மக்களை நாடி அதிகாரத்தை இழந்தாலும், தான் கொண்ட கொள்கையில் மிக கவனமானதாகும்
காட்டில் வாழுகின்ற விலங்களில் சிறுத்தைதான் மிக வலிமையானது...ஆனால் ஏன் சிங்கத்தை ராஜா என்று அழைப்பார்கள தெரியுமா?
சிங்கம் எந்த நேரமும் வேட்டையாடாது, சிறுத்தை யை போல் வேட்டையாடி உணவை தான் கொண்டு சென்று மறைத்தும் உண்ணாது, எல்லாவற்றையும் வேட்டையாது,
காட்டில் சிங்க வேட்டை நிகழ்ந்தால் மற்றையவைகளுக்கு புரியும் அங்கு தமக்கும் உணவு மிசசமிருக்குமென்று இவ்வாறுதான்
நீங்கள் எவ்வளவும் சூழ்ச்சி செய்து அதிகாரத்தை பெற்றாலும் தலைமை என்பதை அதன் சத்தியத்தை வைத்து சமுகம் கண்டு கொள்ளும் அந்த நேரம் உங்களின் தந்திரங்களால் சமுகத்தின் அபிலாசைகளை ஒரு துளியேனும் ஒரு போதும் நிவர்த்திக்க முடியாது போகும்.
மாற்று அணியினருக்கு வந்திருக்கும் அடுத்த தலையிடி முஸ்லீம் கூட்டமைப்பு தொடர்பானதாகும். அதை குழப்ப எடுத்த ஊடக தந்திரம்தான் முன்னாள் செயலாளர் ஹசனலி தொடர்பாக அவர் கூறாத வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய கருத்தை தகவலாக வெளியிட்டமை பாவம் சமுகத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கவும் சர்வதேச சதிகார கும்பல்களின் சதியை முறியடிக்கவும் அதாஉல்லாஹ் என்கின்ற தலைமை தயாராகி விட்டது
இது இன்று நேற்றல்ல..........
2002 ம் மாண்டு ஹக்கீம் நோர்வே ஒப்பந்த்தில் எம்மை இன குழுவென்று கையெழுத்திட்டாரே எம் மீதும் எம் இன அடையாளத்தின் மீதும் சேறு பூசிய போது ஏற்பட்ட இரத்தத்தின் சூடேற்றம்தான் இன்னும் குறையவில்லை...

-அஸ்மி அப்துல் கபூர்-

No comments

Powered by Blogger.