இராவண மன்னனின் மாளிகைக்குச்சென்ற, பௌத்த தேரரின் திகில் அனுபவம்
இராவண மன்னனின் மாளிகை ஒன்று மறைந்திருப்பதாக கூறப்படும் கற்குகைக்குள் முதல் முறையாக தேரர் ஒருவர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த கற்குகைக்கு சென்றமை தொடர்பில் அந்த தேரர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 3000 அடிக்கு கீழ் உள்ள நிலத்தடியில் அமைந்துள்ள நில்திய பொக்குன என்ற இடத்திற்கு உயிரை பணயம் வைத்துச் சென்றேன்.
நில்திய பொக்குன, நிலத்தடியிலேயே அமைந்துள்ளது. எல்ல, வெல்லவாய, கரதகொல்ல பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் ஒன்றரை கிலோ மீற்றர் தூரம் செல்லும் போது இந்த சுரங்கப் பாதைக்கு செல்ல முடியும்.
பாரிய அடர்ந்த காட்டுக்கு மத்தியில் உள்ள இந்த சுரங்கப் பாதைக்கு அந்தப் பகுதி மக்களின் உதவியின்றி செல்ல முடியாது. சுரங்கப் பாதையை பார்த்தவுடன் அச்சம் ஒன்று ஏற்படும்.
கயிறு ஒன்றில் தொங்கியவாறு கிட்டத்தட்ட 30 முதல் 40 அடி தூரம் செல்ல வேண்டும். அதன் பின்னர் சிறிய அறை ஒன்று காணப்படும். இன்னும் ஒரு கயிற்றின் உதவியுடன் 30 அடி கீழே செல்ல வேண்டும்.
அதனை தொடர்ந்து மெதுவாக 500 மீற்றர் தூரம் வரை கீழே சென்றவுடன் நன்கு இடவசதிகளை கொண்ட நினைத்து பார்க்க முடியாத மண்டப அறை ஒன்றினை காண முடியும்.
அங்கு சுவற்றின் ஊடாக அடுத்த பக்கத்திற்கு செல்ல முடியும். அங்கிருந்து 700 - 800 அடிக்கு கீழ் இறங்கும் போது உரையாற்றும் அரங்கு போன்ற ஒன்றை காண முடியும். அதன் ஒரு பகுதியில் நீர் வீழ்ச்சியின் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அதில் இருந்து 1500 அடி தூரம் செல்லும் போது நீல நிறத்திலான மின்னும் அலங்காரத்துடனான குளம் ஒன்று காணப்பட்டது.
இந்த நீர் ஒரு போதும் சூரிய ஒளியை கண்டதில்லை. மிகவும் சுத்தமான நீர் எங்கிருந்து வருவதென்பது மர்மமான ஒரு விடயமாகும்.
எந்தவொரு அதிர்வுகளும் இல்லாத இந்த நீல்திய பொக்குன குளம் பகுதியில் மிகவும் அலங்காரமான மாளிகை ஒன்று அமைந்துள்ளதாக கிராமத்தில் இருந்து வந்த நபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment