அரசாங்கத்திற்கு நெருக்கடி, அஸ்கிரி விஹாரைக்கு ஓடுகிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்த விசேட சந்திப்பு அஸ்கிரி விஹாரையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச அரசியல் அமைப்பு நாடு எதிர்நோக்கி வரும் ஏனைய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாகவும் சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் பௌத்த பீடங்களின் பிரதம மாநாயக்க தேரர்கள் கூடி நாட்டின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தனர்.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
2
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க உள்ளிட்ட முன்னாள் பாதுகாப்புத்தரப்பு அதிகாரிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்துள்ளனர்.
காணாமல்போனோர் தொடர்பான பணியகம் மற்றும் பலவந்தமாக காணமல்போதலிலிருந்துஅனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடனம் தொடர்பான சட்டமூலம் இன்று (05)நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து விளக்கமளிக்கம் நோக்கில் அவர்கள் மாநாயக்க தேரர்களைசந்தித்துள்ளனர்.
தீவிரவாதத்தை இல்லாதொழிக்க செயற்பட்டவர்களுக்கு இந்தச் சட்டமூலத்தின் மூலமாகபாரிய பாதிப்பு ஏற்படும் என தமக்கு தெரிவதாக முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கதெரவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டால் அவர்களை (விசாரணைக்கு)வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என முன்னாள் இராணுவ பிரதானிகள் மாநாயக்கதேரர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment