Header Ads



'ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், பஸ்ஸில் பயணம் செய்கின்றது'

புதிய அரசியல் அமைப்பிற்கு எதிரானவர்கள் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

புதிய அரசியல் அமைப்பிற்கு எதிராக செயற்படும் தரப்பினர் ஆளும் கட்சி பஸ்ஸிலிருந்து இறங்கிச் செல்ல முடியும். புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது ஆளும் கட்சியினால் தேர்தலில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இந்த வாக்குறுதிக்கு மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். அனைவரினதும் விருப்பத்திற்கு இணங்க புதிய அரசியல் அமைப்பு அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலர் அரசியல் அமைப்பு தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் மக்களின் ஆணையின் அடிப்படையிலான பஸ்ஸில் பயணம் செய்கின்றது.

மக்கள் ஆணைக்கு புறம்பாக செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்க பஸ்ஸிலிருந்து இறங்கிக்கொள்ள முடியும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.