முஸ்லிம்களையும், கிறிஸ்த்தவர்களையும் மோதவிட சிங்கள ராவய முயற்சி
சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் இந்து கலாசார ஆடையை அணிந்துகொண்டு குங்கும பொட்டு வைத்திருப்பதால் மாத்திரம் இந்துவாகிவிட முடியாது. அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் இந்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
ராஜகிரிய சத்தர்மாராம விஹாரையில் இடம்பெற்ற சத்தர்மாராஜித விஹாரையில் இடம்பெற்ற பொதுபலசேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் சின்ன காரிகாளன் மற்றும் பெரிய கரிசல் என்று இரு பிரதேசங்கள் உள்ளன. அவற்றின் சின்ன கரிசல்ன் பகுதியில் தமிழ் மக்களும் பெரிய கரிசல் பகுதியில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தனர்.
யுத்த காலத்தின் போது இந்த மக்கள் இடம்பெயர்ந்து சென்றிருந்தால் இவர்களின் காணிகள் கைவிடப்பட்டிருந்தன. எவ்வாறாயினும் பெரிய கரிகாளன் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தினர் முன்பே மீள்குடியேற்றப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தற்போது சிறிய கரிசல் பகுதியில் தமிழ் மக்கள் குடியேற முடியாது என மன்னார் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனால் தற்சமயம் அந்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமது காணிகளை சுற்றி வேலியிட்டுள்ளனர்.
அதனை நேற்றைய தினம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ஒருவர் தலைமையினால் குழு வேலிகளை தகர்த்தெறிந்துவிட்டு வீடொன்றின் மீது தீ வைத்து பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனை கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் பாதிரியார் ஒருவர் எமக்கு அறிவித்தார். இன்று தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மெளனம் சாதிப்பதை விடுத்துவிட்டு இந்த பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
இல்லாவிடின் தமிழ்,சிங்கள மக்களுக்கு இந்த நாடு இல்லாமல் போய்விடும். எனவே இனவாத சக்திகளால் தாக்குதலுக்கு இலக்கான தமிழ் மக்களை காப்பாற்ற தமிழ் அரசியல் வாதிகள் முன்வர வேண்டும்.
விக்கினேஸ்வரன் இந்து சமயத்தவர்கள் அணியும் கலாசார ஆடையினை அணிந்து கொண்டிருப்பதாலும் குங்கும பொட்டு வைத்திருப்பதாலும் முழுமையான இந்துவாகிவிடப்போவதில்லை. மறுபுறத்தில் சம்பந்தனும் அவ்வாறுதான்.
எனவே இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் தனிநாடு கோரிக்கை விடுத்துவிட்டு தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து சிந்திக்க வேண்டும். அவர்களே தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டியவர்களாவர்.
Post a Comment