Header Ads



இலங்கை அணியை மீண்டும் முன்­நிலைக்கு கொண்டுசெல்­வ­தற்கு சில காலம் தேவை - சந்­திமால்

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்­சிக்­காக, முன்­னேற்­றத்­திற்­காக ஒரு வீர­ராக, தலை­வ­ராக எனது நேரத்தை ஒதுக்கி கடு­மை­யா­கவும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் உழைப்­ப­தாக தினேஷ் சந்­திமால் தெரி­வித்தார். எவ்­வா­றா­யினும் இலங்கை அணியை மீண்டும் முன்­னைய நிலைக்கு கொண்டு செல்­வ­தற்கு சில காலம் தேவை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

டெஸ்ட் அணித் தலை­வ­ராக தங்கள் முன்னே உள்ள இலக்கு என்­ன­வெனக் கேட்­ட­போது, ‘‘இலங்கை அணியை தர­வ­ரி­சையில் முத­லி­டத்துக்கு இட்டுச் செல்­வதே எனது கடைசி இலக்­காகும்.

அதனை ஒரு மாதத்தில், ஒரு வரு­டத்தில் எம்மால் செய்­ய­மு­டி­யாது. அதற்கு சிறிது காலம் தேவை. அணியில் இடம்­பெறும் இளம் வீரர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்­த­வாறு அந்த இலக்கை நோக்கி எமது பய­ணத்தை செய்­ய­வேண்டும். ஒரே­ய­டி­யாக முதலாம் இடத்­திற்கு வர­மு­டி­யாது.

படிப்­ப­டி­யாக முன்­னே­ற­வேண்டும். அதற்­கான எதிர்­பார்ப்­புடன் நானும் எனது அணி­யி­னரும் இருக்­கின்றோம்’’ என்றார் தினேஷ் சந்­திமால்.
இலங்­கையின் வருங்­காலத் தலை­வ­ராக்­கும் ­பொ­ருட்டு சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் உங்­களைத் தயார்­செய்­வ­தாக அப்­போ­தைய கிரிக்கெட் நிரு­வாகம் கூறி­யி­ருந்­தது.

ஆனால் 2014இல் இரு­பது 20 அணித் தலைவர் பத­வி­­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டீர்கள், உதவித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டீர்கள். அப்­போது உங்­க­ளது மனோ­நிலை எவ்­வாறு இருந்­தது. இன்று தலைமைப் பொறுப்பு வழங்­கப்­பட்ட பின்னர் உங்­க­ளது மனோ நிலை எவ்­வாறு இருக்­கின்­றது என 'மெட்ரோ ஸ்போர்ட்ஸ்' வின­வி­ய­போது, கடி­ன­மான கேள்வி, ஆனால் மிகவும் நல்ல கேள்வி என்­ற­வாறு தினேஷ் சந்­திமால் பதி­ல­ளிக்­கையில், ‘‘2014இல் நான் இரு­பது 20 கிரிக்கெட் தலை­வ­ராக இருந்தேன்.

தலை­வ­ராக நான் எப்­போதும் எனது அணியை முன்­னி­லைப்­ப­டுத்­தித்தான் சிந்­தித்தேன். நாட்­டிற்கு முத­லிடம், அணிக்கு முத­லிடம். நான் எப்­போதும் எனது 15 வீரர்கள்,  யார் சிறந்த பதி­னொ­ருவர் என்­பது பற்­றித்தான் சிந்­தித்தேன்.

நான் அணியை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யதால் சில சந்­தர்ப்­பங்­களில் என்னால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. குறிப்­பாக ஒரு விட­யத்தை நினை­வு­ப­டுத்­த­வேண்டும். இரு­பது 20 அணித் தலை­வ­ராக இருந்­த­போது நான் 6ஆம் இலக்­கத்தில் துடுப்­பெ­டுத்­தா­டினேன்.

சில வேளை­களில் அந்த இடத்தில் துடுப்­பெ­டுத்­தா­டும்­போது எனக்கு 2, 3 ஓவர்­கள்தான் துடுப்­பெ­டுத்­தாடக் கிடைக்கும். தலைவர் என்ற வகையில் நான் ஆரம்ப வீர­ராக களம் இறங்கி தேவை­யான ஓட்­டங்­களை பெற்­றி­ருக்­கலாம். ஆனால் நான் ஒரு­போதும் அப்­படி எண்­ண­வில்லை. அணிக்கு என்ன தேவை, அணியின் வெற்­றிக்கு என்ன தேவை என்­பதை அறிந்து அதற்­கேற்ப நான் எனது பணியை ஆற்­றினேன். 

அணித் தலை­வ­ராக இருந்­த­போதும் தலைவர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­ய­போதும் நிறைய விட­யங்­களைக் கற்­றுக்­கொண்டேன். அந்த அனு­ப­வங்­க­ளுடன் இப்­போது எனக்கு மிகப் பெரிய டெஸ்ட் அணித் தலைவர் என்ற பொறுப்பு கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களைக் கொண்டு தற்போது என்முன்னே உள்ள சவாலை  ஏற்று சிறந்த தலைமைத்துவத்தை வழங்கவுள்ளேன். அதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்’’ என்றார்.

No comments

Powered by Blogger.