ஜனாதிபதியிடம் அன்புடன் ஒரு கோரிக்கை
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழ் இருக்கும் சகல நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஊழலை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு தான் மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -06- நடைபெற்ற உலக இலங்கையர் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகள் மிகவும் செயலிழந்துள்ளதாகவும் இதனால், ஜனாதிபதிக்கு முடிந்தால் மூன்று மாத காலத்தில் சகல குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை நடத்தி முடிக்குமாறு நாட்டை நேசிக்கும் நபர் என்ற வகையில் கோரிக்கை விடுப்பதாகவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து தெளிவானது மற்றும் நேர்மையானது என நான் நம்புகிறேன். உதாசீன நிலையில் காணப்படும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவை செயற்படும் நிலைமைக்கு மாற்றுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஜெனிவா நகரில் அண்மையில் மற்றுமொரு கூட்டம் நடைபெற்றதாகவும் அந்த கூட்டத்தில் கலப்பு நீதிமன்றத்தை நியாயப்படுத்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் இலங்கையின் நீதித்துறை முழுமையான அரசியல் மயமாக்கப்பட்டு ஊழல் மிக்க நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளதாக பாரதூரமான மற்றும் அவமதிப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
மோனிகா பின்டோ என்ற பெண்மணி இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment