"துருக்கி ஜனாதிபதியை, கொல்ல வேண்டும்"
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குடிமகன் ஒருவர் துருக்கி ஜனாதிபதியான எர்டோகனை கொலை செய்ய வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி ஆட்சியை கைப்பற்ற புரட்சி வெடித்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அந்நாட்டு ஜனாதிபதியை கொலை செய்ய வேண்டும் என சுவிஸ் குடிமகன் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.
துருக்கி ஜனாதிபதியான எர்டோகனுக்கு மிரட்டல் விடுத்ததாக ஏற்கனவே சுவிஸை சேர்ந்த 4 பேர் மீது துருக்கி புகார் கொடுத்தது.
ஆனால், இக்குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என சுவிஸ் நிராகரித்து விட்டது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ’எர்டோகனை அவரது ஆயுதத்தாலேயே கொலை செய்ய வேண்டும்’ என மிரட்டல் விடுத்து நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இவ்விவகாரத்தை தொடர்ந்து நபரை கைது செய்து விசாரணை நடத்தவும், அவரை துருக்கி நாட்டிற்கு நாடு கடத்த வேண்டும் எனக் கூறி சுவிஸ் அரசை துருக்கி கேட்டுக்கொண்டது.
இவ்விவகாரம் தொடர்பாக சுவிஸ் அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தற்போது துருக்கி அரசு கடந்த 3-ம் திகதி மீண்டும் சுவிஸ் அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது.
துருக்கி அரசின் கோரிக்கை தொடர்பாக சுவிஸ் அரசு விரைவில் முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment