ரணில், குற்றவாளிகளை காப்பாற்றுகிறார் - ரஞ்சன் பரபரப்பு குற்றச்சாட்டு
மகிந்த ராஜபக்ச திருட்டில் ஈடுபட்ட நபர் என்று கூறினாலும் இந்த நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்வது இல்லை என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் -05- உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,
இந்த நாட்டில் 57 லட்சம் மக்கள் மகிந்த நல்லவர் என்று தெரிவித்தார்கள். 62.5 லட்சம் வரையிலான மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லவர் என்று கூறினார்கள்.
மக்களே அதனைத் தீர்மானிக்கின்றார்கள். இந்த இடத்தில் மகிந்த ராஜபக்ச திருட்டில் ஈடுபட்டார், யோசித மற்றும் நாமல் போன்றோர் ஊழல் செய்துள்ளார்கள் என்று கூறினாலும், ஆதாரங்களோடு நிரூபிக்கப்பட்டாலும் அந்த 57 லட்சம் மக்கள் நம்புவதில்லை.
அதே போல ஐக்கிய தேசிய கட்சியில் திருட்டுகள் இடம் பெற்றது என்று கூறினாலும், திருட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும் அந்த 62.5 லட்சம் மக்கள் நம்புவது இல்லை.
தங்கள் தரப்பை காப்பாற்றிக் கொண்டே வருகின்றார்கள். இவ்வாறான மக்கள் தங்கள் தலைவனை விட்டுக் கொடுப்பது இல்லை.
அதேபோல், திருட்டுகளை பிடித்து தண்டிக்கும் ஒருவருக்கு இந்த நாட்டின் தலைவனாக இருந்து தொடர்ந்து பயணம் செய்ய முடியாது, கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவி ஏற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் திருடர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை ஏமாற்றப்படுகின்றார்கள்.
இந்த நாட்டின் மக்கள் தங்கள் தலைவர்களை மட்டும் காப்பாற்றிக்கொன்டு வருகின்றார்கள். இதுவே இன்றைய நாட்டின் நிலை.
மேலும், லஞ்ச ஊழல் விசாரணைகளும் முறையாக நடைபெறவில்லை, குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டுக் கொண்டே வருகின்றார்கள் எனவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
Post a Comment