நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின், மக்கள் சந்திப்பு நிகழ்வுகள்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG ) விசேட மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் காத்தான்குடியில் இடம் பெற்றன.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஒரு தேசிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் நடாத்தப்பட்ட முதலாவது இம்மக்கள் சந்திப்பு நிகழ்வானது காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள NFGG யின் பிராந்திய காரியாலய வளாகத்தில் இடம் பெற்றது.
NFGG யின் மகளிர் பிரிவினால் பெண்களுக்கென ஏற்பாடு செய்யபட்பட்ட பிரத்தியேக நிகழ்வு பிற்பகல் 04.30 மணிக்கும் ஆண்களுக்கான நிகழ்வு இரவு 08.00 மணிக்கும் இடம் பெற்றன.
இந்நிகழ்வுகளில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பிரதித்தவிசாளர் சிறாஜ் மசூர் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் பழ்லுல் ஹக் மற்றும் MACM ஜவாஹிர் ஆகியோர் விசேட உரைகளை ஆற்றினர்.
கடந்த 11 வருடங்களில் கடந்து வந்த பாதையின் அனுபவங்களை இலக்கியத்தோடு மீட்டிப் பார்க்கும் விசேட கவிதையொன்றினை NFGGயினர் ஸ்தாபக உறுப்பினர் வித்யாகீர்த்தி அமீரலி ஆசிரியர் வழங்கினார். நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களும் தமது கருத்துக்களை வழங்கினர்.
ஆண்களும் பெண்களும் என ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு இரவு 11.00 மணியளவில் இராப்போசனத்துடன் நிறைவு பெற்றது.
Post a Comment