Header Ads



சுதந்திரக் கட்சியுடன் மீண்டும், கைகோர்க்க தயாரில்லை

எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின் போது, புதிய ஜனநாயகக் கட்சியின் சின்னமான அன்னம் சின்னத்தில் களமிறங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

அன்னம் சின்னத்தில் களமிறங்கும் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்தே போட்டியிடவேண்டுமென்று, அக்குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.  

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அந்தக்குழு அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதன்போதே, மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அந்தத் தகவல் தெரிவிக்கின்றது.   

எனினும் இந்த யோசனைக்கு, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு குழு, கடும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மீண்டுமொருதடவை கைகோர்த்துக் கொண்டு, பயணிப்பதற்கு, தாம் தயாரில்லை என்றும் அக்குழு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.   

தேசிய அரசாங்கம் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கூட, பெரும் விரக்தியடைந்த நிலையிலேயே உள்ளனர் என்றும் அந்த மாற்றுக்குழு, இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளதாகவும், ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியுடன் கூட்டணியமைப்பது என்ற எண்ணத்தை கைவிடுமாறும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளதாகவும் அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.  

No comments

Powered by Blogger.