கத்தார் - பாக்கிஸ்தான் சந்திப்பு
கத்தார் வெளிவிவகார அமைச்சர் அஷ;iஷக் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் ஆல்தானி மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் ஆpகயோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று இடம் பெற்றது.
பாக்கிஸ்தானுக்கான உத்தியோக பூர்வமான விஜயத்தை மேற்கொண்டுள்ள கத்தார் வெளிவிவகார அமைச்சருடனான தூதுக் குழுவினர் நேற்று பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீஃப் அவர்களுக்கிடையே நிகழ்ந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு, ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் பல் வேறு முக்கிய அம்சங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
இச்சந்திப்பின் போது, கத்தாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட அங்கீகாரமற்ற நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பாக்கிஸ்தான் பிரதமரிடம் கத்தார் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி சந்திப்பின் போது பாக்கிஸ்தான் பிரதமரின் வெளிவிவகார அமைச்சுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் மற்றும் கத்தார் வெளிவிவகார முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
(நன்றி : அல்ராயா 19-07-2017)
நாகூர் ழரீஃப்
Post a Comment