'உலக நாடுகளில் இலங்கையில் மாத்திரமே இப்படிப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர்' - மைத்திரி விசனம்
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தில் உள்ள ஆணையாளர்கள் இன்னும் ஆறு மாதத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகார பொறுப்பை ஏற்கவேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குப்பையினை வைத்து பெரும் மோசடிகள் நடக்கின்றன. குப்பை கொட்டுவதற்கு பாதாள உலக கோஷ்டிகளும் மோசடி கும்பல்களும் பெரும் தடையாக உள்ளன. எவ்வாறாயினும் அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து குப்பை பிரச்சினையை தீர்ப்பேன். அடுத்த அரசாங்கத்திற்கு குப்பை பிரச்சினையை வைத்து விட்டு செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குப்பை முகாமைத்துவம் மற்றும் டெங்கு நோய் தொடர்பாக நாடுபூராகவும் உள்ள 335 உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கான விசேட செயலமர்வு கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
குப்பை சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குப்பை மேட்டினால் மீதொட்டமுல்லையில் பேனர்த்தம் ஏற்பட்டு பல அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். குப்பை முகாமைத்துவம் தொடர்பில் இதற்கு முன்பு இருந்த அரசாங்கங்களுக்கு ஒரு தேசிய கொள்கை இருக்கவில்லை.
இதன்காரணமாகவே குப்பை விவகாரம் இவ்வளவு தூரத்திற்கு வந்துள்ளது. குப்பை முகாமைத்துவம் செய்வதற்கு பதிலாக குப்பையை குவித்து மேடாக்கினர். அந்த குப்பை மேடு கீழே விழுந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டன. அந்த குப்பை மேடு அரசாங்கத்திற்கு மேலேயும் விழுந்தது. அதாவது அரசாங்கத்தின் மீதே விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாட்டில் சில உள்ளூராட்சி நிறுவனங்களில் குப்பை முகாமைத்துவத்திற்கு கொள்கை காணப்படுகின்றது. குறிப்பாக பலாங்கொடை பிரதேச சபை உட்பட சில உள்ளூராட்சி மன்றங்களில் குப்பை முகாமைத்துவம் தொடர்பில் கொள்கை உள்ளன. எனினும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இவ்வாறான கொள்கை இல்லை.
குப்பையை வைத்து பணமீட்ட கூடியவர்களினால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டது.குப்பையை வைத்து மோசடி செய்ய கூடிய கும்பல் இருந்தது. மேலும் பாதாள உலக கோஷ்டியினரும் தலையீடு செய்துள்ளனர். குப்பை கொட்டுவதற்கு பாதாள உலக கோஷ்டிகளும் மோசடி கும்பல்களுமே பெரும் தடையாக உள்ளன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் சிலர் கூட தமது பிரதேசங்களில் குப்பை குவிப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். உலக நாடுகளில் இலங்கையில் மாத்திரமே இப்படிப்பட்ட அமைச்சர்கள் உள்ளனர்.
இதற்கு முழுக் காரணம் யாருப்ப! மக்கள் விரட்டியவர்களை,யாரு அமைச்சுப் பதவி,கொடுத்தது,,அந்த நல்ல்வன்ன்!! ??? யாரு வினை விதைத்வன் வினை அறுப்பான் என்று தமிழ் பழ மொழி ஒன்று இருக்குது,தொரியுமோனண்ணோணோங்ங்ணா..!!!??
ReplyDelete