'பயிற்சி பெற்ற ஆயுதக்குழுவொன்று' செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன'
நீதிபதி இளஞ்செழியன் மீதான தாக்குதலை வடக்கிலே வன்முறை செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னும் அங்கு இருக்கின்றது என்று சொல்லி அரசியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்பாடாகவே கருதுகின்றேன் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது;
இன்று நாட்டில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் யாழ்ப்பாணத் தில் நீதித்துறை சார்ந்த ஒருவருக்கு நீதிக்கே சவால் விடும் வகையில் தாக்குதல் நடாத்தியமையை தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டிக்கின்றது. இந்த தாக்குதல் காட்டு மிராண்டித்தனமானதுடன்¸ பண்பற்றதும்¸ முறையற்றதுமாகும்.
இந்த தாக்குதலின் பின்னால் பயிற்சி பெற்ற ஆயுதக்குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலாக இருக்கின்றது. உண்மையிலேயே வடக்கிலே வன்முறை செயற்பாடுகள் இல்லை ஓய்ந்து விட்டது என்று சொல்லும் போது, இல்லை இல்லை இன்னும் அங்கு இருக்கின்றது என்று சொல்லி அரசியல் செய்ய விரும்பும் சிலரின் செயற்பாடாகவே இதனை நான் கருதுகின்றேன்.
தென்னிலங்கை பேரினவாதிகளுக்கு இது ஒரு வெறுமனே மெல்லும் வாய்க்கு அவல் கிடைத்தது போல ஒரு சூழலை தந்திருக்கும் என நினைக்கின்றேன். இதை நினைத்து கவலை அடைகின்றேன். உண்மையிலேயே அது மட்டுமல்ல நீதிபதி இளஞ்செழியன் கடுமையான¸ காத்திரமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளார். மிகவும் சர்ச்சைக்குரிய வழக்குகளை பொறுபேற்று செயற்படுத்தி வருகின்றார் அதை கண்காணித்தும் வருகின்றார். இந் நிலையில் அவர் மீதான தாக்குதல் வடக்கிலே சட்டம் ஒழுங்குக்கு இடப்பட்டுள்ள சவாலாக கருதுகின்றேன் .
இது தொடர்பாக பொலிஸார் கடுமையாக செயற்பட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கிடைத்த செய்தியின் அடிப்படையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழக்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு சட்ட விரோதமான செயற்பாடுகளையும் வன்முறைகளையும் இல்லாதொழிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத் துகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment