வசமாக மாட்டினார் ஞானசாரா, கடும் தண்டனைக்கு வாய்ப்பு..!
ஞானசார தேரர். இவரை தெரியாத யாரும் இன்று இலங்கையில் இருக்க முடியாது. பெளத்த தேரரான இவரை இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் அறிந்து வைத்திருக்க, அவரது அகிம்சை வழிமுறை ஒன்றும் காரணமல்ல. மாற்றமாக தொனியை உயர்த்தி, அதிகார தோரணையில், பிறர் ஒருபோதும் விரும்பாத பாணியில், விரும்பத்தகாத வசனங்களை லாவகமாக கையாளுவதாலேயே அவரை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.
இத்தகைய ஆவேச குணம் கொண்ட கலகொட அத்தே ஞானசார தேரர், அந்த பண்பினாலேயே தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளார்.
ஆம், 2016 ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஞானசார தேரர், தனது வழமையான விளையாட்டைக் காட்டச் சென்று, பொறிக்குள் மாட்டிய எலியாய் தற்போது சட்டத்துடன் போராடிக் கொண்டிருக்கின்றார்.
இது தொடர்பிலான வழக்கின் சாட்சி விசாரணைகள் கடந்த 18 ஆம் திகதி முதல் மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி கடந்த 18 ஆம், 19 ஆம் திகதிகளில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் ஒரு சாட்சியாளர் மட்டும் முழுமையாக சாட்சியங்களை வழங்கியுள்ளதுடன் குறுக்குக் கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டார். அவர் வேறு யாரும் அல்ல ஞானசார தேரர், ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொண்டபோது ஹோமாகம நீதிவானாகக் கடமையாற்றிய தற்போதைய கொழும்பு மேலதிக நீதிவான் ரங்க திஸாநாயக்கவே அவர். தற்போது குறித்த சம்பவம் இடம்பெறும் போது ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் இருந்த பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீப பீரிஸ் சாட்சி வழக்கை ஆரம்பித்திருக்கின்றார். இந் நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் நீதிவான் ரங்க திஸாநாயக்க சாட்சியத்தில் தெரிவித்த சில விடயங்களை விடிவெள்ளி வாசகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது.
'தொலைபேசி மணி அடித்ததாலும், கொட்டாவி விட்டதற்காகவும் நீதிமன்றை அவமதித்ததாக சிறைத் தண்டனை வழங்கப்பட்ட வரலாறுகள் எமது நீதித்துறையில் உள்ளன. இந் நிலையில் நீதிமன்ற விசாரணையின் இடை நடுவே, நீதிவானுக்கு நேராக தனது விரல்களை நீட்டி, எக்னெலிகொட வழக்கின் சந்தேக நபர்களான இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்குமாறு நீதிவானுக்கே கட்டளை இட்டும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியும் நீதிமன்றை அவமதித்த ஞானசார தேரருக்கு உச்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும். அதனாலேயே நான் இந்த வழக்கை அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்துக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தினேன். ஏனெனில் மேன்முறையீட்டு நீதிமன்றினால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
நீதிமன்றுக்கு இவ்வாறான இடையூறு ஏற்படுத்தி, சிரேஷ்ட அரச சட்டவாதியை பேடித்தனமானவர் எனவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் உள்ளவர்களும் அப்படிப்பட்டவர்களே என்றும் கூறி அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வண்ணம் ஞானசார தேரர் நடந்துகொண்டார். இத்தகைய சம்பவம் ஒன்றுக்கு நான் எனது 12 வருடகால நீதிவான் சேவையில் முகம் கொடுத்ததே இல்லை. அதனால் அந்த சம்பவமும், நாளும் என்னால் மறக்க முடியாதது. எனக்கு தெரிந்த வகையில் இந்த சம்பவம் தான் நீதிமன்றை அவமதிக்கும் விதமாக பதிவாகியுள்ள மிகப் பெரிய சம்பவம்' என நீதிவான் ரங்க திஸாநயக்க சாட்சியம் அளித்திருக்கின்றார்.
இந்த சாட்சியங்களில் உள்ள ஒவ்வொரு விடயமும் மிக முக்கியமானது. ஏனெனில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் இரு வழிகளில் நீதிவான் ஒருவருக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
நீதிவான் என்ற ரீதியில் நீதிமன்ற அமைப்புச் சட்டத்தின் 55 (2 ) ஆவது அத்தியாயத்தின் கீழும் அரசியலமைப்பின் 105 (3) ஆவது அத்தியாயத்தின் கீழும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அமைப்பு சட்டத்தின் கீழ் நீதிவான் நடவடிக்கை எடுத்திருப்பின் அது சிறிய ஒரு தண்டனையையே ஞானசாரவுக்கு பெற்றுக்கொடுத்திருக்கும். எனினும் இங்கு நீதிவான் வழக்கை அரசியலமைப்பின் உறுப்புரைகளுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு பாரப்படுத்தியுள்ளமையானது ஞானசார தேரருக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கமே.
எனவே, நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஞானசார தேரர் மீதான குற்றம் நிரூபணமாகுமானால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படலாம். MFM.Fazeer
எதுவும் நடக்க போவது இல்லை இவர் சித்தசுவதீனமற்றவர் என்று வழக்கு தள்ளி போடுவார்கள்.
ReplyDeleteஉண்மையை உரக்கச் சொன்னீர்.
Deleteசும்மா அதை இதைச்சொல்லி உசுப்பேத்துறாங்க.
Deleteஉண்மை
Deleteஇன்ஷா அல்லாஹ்
ReplyDeleteHe will never be punished! He's above the law!
ReplyDeleteThere is possibility for another ethnic tense situation by this BBS against muslims in Sr Lanka before 26, and then the bloody media will try to give a message stating that a buddist hero who protect buddism will be arrested and some buddist relugious organisation will threat the government. Finally, he will be released in 5 minutes aftef arrest.
ReplyDeletenext drama ready
ReplyDeleteNothing will happen but still appreciate this Homagama Judge
ReplyDeleteமக்களே!!! தயவு செய்து பெரிசா ஒரு தண்டனையையும் எதிர்பாக்காதிங்க, ஆக குறைந்த பட்ச தண்டனயான 1250.50 ரூபாய் தண்டப் பணம் கட்ட சொல்லுவாங்க...
ReplyDelete