பாகிஸ்தான் தூதரகம் - றிசாத் தொடர்பு, சிங்கள ராவயவுக்கு சந்தேகம்
கொழும்பு - 7, பான்ஸ் பிளேஸ், இலக்கம் - 17 என்ற முகவரியில் இருக்கும் 1.5 ஏக்கர் காணியை கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சர் றிசார்ட் பதியூதீன், பாகிஸ்தான் தூதரக அலுவலகம் நிர்மாணிப்பதற்கு கொடுத்துள்ளதாக சிஹல ராவய அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஏற்கனவே இடம் இருக்கும் போதே கொழும்பு நகரில் பெறுமதி மிக்க காணி ஒன்றை விடுவித்துள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது சம்பந்தமாக அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
இதேவேளை, சமூர்த்தி ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமாக இருந்த இந்த காணியை உணவு திணைக்களத்திற்கு வழங்குமாறு உணவு திணைக்கள ஆணையாளர் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளதாக சிஹல ராவய அமைப்பின் செயலாளர் மாகல்கந்து சுதத்த தேரர் கூறியுள்ளார்.
உணவு திணைக்களம் பெற்றுக்கொண்ட இந்த காணியை வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய பாகிஸ்தான் தூதரகத்தை நிர்மாணிக்க வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
உணவு திணைக்கள ஆணையாளர் ஜே. கிருஷ்ணமூர்த்தி, சமூக வலுவூட்ட அமைச்சுக்கு அனுப்பிய கடிதம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி விஜயந்தி எதிரிசிங்க, கைத்தொழில் மற்றும் வணிக விவகார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிய கடிதங்களையும் சுதத்த தேரர் ஊடகங்களுக்கு முன்வைத்துள்ளார்.
Post a Comment