மஹிந்த, கோத்தாவின் கழுத்தைவெட்டி, பலி கொடுக்க முயற்சி
காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களும் தண்டனை பெறவேண்டிவரும். ஏனெனில் பட்டலந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இதில் சிக்கிக்கொள்ள இடமுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காணாமலாக்கப்படுதலிலிருந்து ஆட்களைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலத்தினூடாக எமது இராணுவத்தினர் மற்றும் அரச தலைவர்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசென்று தண்டனை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தை சர்வதேச புலிகளிடம் ஒப்படைக்கும் உபாயமாகவும் உள்ளது.
அத்துடன் குறித்த சமவாயத்தினூடாக எவராவதொருவர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் எந்தவொரு இராணுவத்தினரும் சம்பந்தப்பட்டிருப்பின், இராணுவப் பிரிவின் உயரதிகாரிகள் வரையில் தவறிழைத்தவர்களாகக் கருதி இருபது வருடங்கள் வரையிலான தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.
இதன்மூலம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் முப்படைகளின் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரின் கழுத்தை வெட்டி பிரிவினைவாதிகளுக்கு பலிகொடுப்பதனை அடிப்படையாகக்கொண்டே இச்சட்ட மூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முனைவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment