கிழக்கில் ஷரீஆ தீவிரவாத கல்வி, இலங்கை வானொலியை வஹாபிகள் ஆக்கிரமிப்பு
ராஜகிரியவிலுள்ள பொதுபலசேனாவின் உத்தியோகபூர்வ காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலன்த விதானகே கூறியவை,
முஸ்லிம் அடிப்படைவாதத்துடன் தொடர்புபட்ட சில விடயங்களுக்கும் நாம் அரசாங்கத்திடம் விளக்கம் கோருகிறோம்.
முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வில்பத்து தேசிய வனத்தை அழித்து மக்களைக் குடியேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் இடமளிக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தின் காலத்திலும் இந்த அழிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
கிழக்கில் ஷரீஆ தீவிரவாத கல்வியைப் போதிப்பதற்காக ஓர் இஸ்லாமிய பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு வருகிறது. அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 500 ஏக்கர் மகாவலி காணியை இதற்காகப் பெற்றுக்கொடுத்துள்ளார். இங்கு போதிக்கப்படவுள்ள கல்வி என்ன? வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய மாணவர்கள், தீவிரவாதிகள், இப்பல்கலைக்கழகத்தில் கற்கைக்காக வருவதற்கு வாய்ப்புண்டு. இதனை அரசாங்கம் அறியுமா?
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஐவேளை பாங்கு சொல்வதற்கு இடமளிக்கப்பட்டது. அவ்வாறு இடமளிக்காதிருந்தால் வஹாப்வாதிகள் வானொலியை ஆக்கிரமித்திருப்பார்கள் என்று அதன் அப்போதைய தலைவர் ஹட்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன? என்றார்.
Post a Comment