மஹிந்தவின் ஆட்சியில், ஹஜ் கடமையில் பெரும் மோசடிகள் நடந்தன - ஹலீம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது புனித ஹஜ் கடமை விவகாரத்தில் பெரும் மோசடிகள் நடந்துள்ளன. இந்த மோசடியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கும் பிரதான பங்குண்டு. தற்போது இதற்கான ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.
இதன்படி அஸாத் சாலிக்கு எதிராக விரைவில் நிதி மோசடி பிரிவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை ஹஜ் கடமைக்கு செல்வோருக்கான கோட்டா அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஹஜ் கடமைக்கான கட்டணமும் குறைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹஜ் விவகாரம் தொடர்பில் வினவிய போதே அவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(எம்.எம்.மின்ஹாஜ்)
Post a Comment