சர்வதேச நீதிமன்றை நாடுகிறது கத்தார், துருக்கி படைகளை திருப்பியனுப்ப அடியோடு மறுப்பு
-நாகூர் ழரீஃப்-
கடந்த மாதம் 05 தேதி முதல் அண்டை நாடுகளான சஊதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளினால் முன்னெடுக்கப் பட்டுவரும் முற்றுகையினால் ஏற்பட்ட நட்டஈட்டினை சர்வதேச நீதிமன்னத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்கான முஸ்தீப்புக்களில் இறங்கவுள்ளதாக கத்ததாருக்கான பாதுகாப்பு அமைச்சரான டாக்டர் காலித் பின் முஹம்மத் அல் அதிய்யா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 1980 களில் மத்திய அமேரிக்க நாடான நிகாராகு (Nஐஊயுசுயுபுருயு) முகம்கொடுத்த ஒரு பிரச்சினையைப் போன்ற ஒன்றையே எமது நாடும் முகம்கொடுத்து வருகின்றது. மேற்படி நாடும் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளின் போது அது சர்வதேச நீதிமன்றை நாடி அதற்கேற்பட்ட நட்டஈட்டினைப் முழுமையாகப் பெற்றுக் கொண்டது. இது போன்றே கத்தாரும் தனக்கு மேற்படி நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட அநீதியானதும் விணைத்திறன் அற்றதுமான நடவடிக்கைகளினால் ஏற்பட்ட நட்டங்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
தற்போதைய முற்றுகையானது 1996 ஆம் ஆண்டின் நெருக்கடியான நிலமையைக் காட்டிலும் கடினமானதும் மோசமானதாகவும் அமைந்துள்ளது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் அளவிற்கான முயற்சிகளாகவே இது பார்க்கப்படுகின்றது. கத்தார் ஏற்கனவே 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டளவிலும் இதற்கொத்த சம்பவங்கள் இடம்பெற்றன என்பதும் பலரும் அறிந்த ஒரு விடயமாகும். எனினும் அன்றும் இன்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எவையும் நியாயமானதாகவோ உண்மையானதாகவே இல்லை என்பது மட்டும் பலரும் அறியாத ஒரு விடயமாகும்.
கத்தார் அமெரிக்கா உறவு வரலாற்று முக்கியத்துவம் பெற்றதும் வியூகம் உள்ளதுமாகும். கத்தார், அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்திலும் முயற்சியிலும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி உலக மற்றம் பிராந்திய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்து வரும் ஒரு நாடாகும். இத்தகைய நிலைப்பாட்டின் போது ஐக்கிய அரபு இராச்சியம் இங்குள்ள அமெரிக்கப் படையினரை திருப்பியனுப்புமாறு திடீரெனக் கோரியமை அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
அத்துடன் இங்கு நிலைகொண்டுள்ள துருக்கியப் படையினையும் திருப்பியனுப்பும் முயற்சியிலும் அவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தனர். இக்கோரிக்கையை கத்தார் முழுமையாக நிராகரித்து விட்டது. இப்படியான கோரிக்கையினை முன் வைப்பதற்கு அவர்களுக்கு எத்தகைய உரிமையும் கிடையாது. துருக்கி மற்றும் கத்தாருக்கான தொடர்பானது மிக நீண்ட காலத்துத் தொடர்பாகும் அது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்பாகும்.
கத்தாரின் அமீர் அதிமேதகு அஷ;iஷக் தமீம் பின் ஹமத் ஆல்தானி அவர்களது ஒளிமயைமான திட்டங்களும் நிர்வாகத் திறமையும் பிராந்தியத்திலும் குறிப்பாக கத்தாரிலும் கல்வி, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரம் போன்ற அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடும் அளவிற்கான முன்னேற்றத்தைக் கண்டுவருகின்றது. இவர் ஒரு வாலிபரும் துடிப்புள்ள தலைவரும் என்பது பல கட்டங்களில் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
(நன்றி : அல்ராயா 18-07-2017)
Post a Comment