ஞானசார பங்கேற்ற கூட்டத்தில், அரசாங்கத்திற்கு அஸ்கிரி பீடம் மிரட்டல்
புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவளிக்கப்பட முடியாது என அஸ்கிரி பீடம் அறிவித்துள்ளது.
பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பொழுது அஸ்கிரி பீட பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றை சமர்ப்பித்தால் அதற்கு ஒட்டுமொத்த சங்க சமூகமும் எதிர்ப்பை வெளியிடும் என அஸ்கிரி பீட பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இந்த சந்திப்பு அஸ்கிரி பீடத்தில் நடைபெற்றுள்ளதுடன் சந்திப்பில் அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதன தேரரும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கப்பட முடியாது என அஸ்கிரி பீடம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே அரசாங்கத்தின் மீது அஸ்கிரி பீடம் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment