இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கிறது குவைத்
-ARA.Fareel-
இலங்கையினதும் குவைத் நாட்டினதும் உறவினைப் பலப்படுத்தும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் குவைத் இலங்கை மக்களுக்கு வழங்கும் நிதி உதவியினை நீடிக்கவுள்ளது.இலங்கையில் பல்வேறு திட்டங்களுக்காக அந்நாடு உதவிகள் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் காளான் உற்பத்தியை மேம்படுத்தல், வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கல், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்தை அமைத்தல் ஆகிய திட்டங்களுக்கு உதவவுள்ளது.
குவைத் அரசாங்கமும் குவைத் நிதியமும் இலங்கைக்கு உதவுவதில் பெரும் பங்கினை வகிக்கின்றன என குவைத் நாட்டின் இலங்கைக்கான குவைத் தூதுவர் கலப் புதாஹர்ய் தெரிவித்தார்.வேர்ள்ட் விஷன் அமைப்பின் ஊடாக இலங்கையில் காளான் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பேக், மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காகவும் 34589 அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக குவைத் அரசாங்கம் 372,000 அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.குவைத் அரசாங்கம் எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கை மக்களுக்கும் மேலும் பல உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளது எனவும் குவைத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Post a Comment