தமிழ் கடும்போக்காளர்களுடன் றிசாத் வாய்த்தர்க்கம், விக்னேஸ்வரன் வெளிநடப்பு
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்றையதினம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர் அமைச்சர் ரிசாத் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், டெனிஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீகந்தராஜா, வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் முஸ்லீம் குடியேற்றம் அமைக்கும் விவகாரம் தொடர்பான விவாதம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முல்லை மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையே வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் வடக்கு முதல்வர் சிவி.விக்னேஸ்வரன் கூட்டத்தை வெளிநடப்பு செய்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லீம் குடியேற்றம் ஒன்றிற்கான ஏற்பாடுகள் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் குடியேற்றம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடந்தன. அன்றைய தினம் அப்பிரதேச மக்கள் அதற்கு தமது எதிர்ப்பினை தெரிவிதிருந்தார்கள். இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அது தொடர்பான விடயம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முல்லை மாவட்டத்தை சேர்ந்த வட மாகண உறுப்பினர் கௌரவ ரவிகரனுக்கும் முஸ்லீம் மக்களை பிரநிதுத்துவப்படுத்தும் முல்லை வடமாகாண உறுப்பினர் ஜெனோபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் முற்றிய நிலையில், அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் ரவிகரனுடன் கடும்தொனியில் வாக்குவாதத்துடன் ஈடுபட்டிருந்த நிலையிலேயே கூட்டத்தின் இடைநடுவே முதல்வர்; வெளிநடப்பு செய்தார்.
மேற்படி கூட்டத்தில் பங்குபற்றிய வடமாகண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment