Header Ads



கடலில் சிக்கிய யானை, களத்தில் இறங்கி காப்பாற்றிய கடற்படை (படங்கள்)



காலி பகுதியிலுள்ள ஆழ்கடலில் ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த யானையொன்று கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் நேற்று -11- யானை காப்பாற்றப்பட்டுள்ளது.

கொக்கிலாய் பிரதேசத்திற்கு சொந்தமான கொக்குதுடுவாயில் இருந்து கடற்படை 8ஆம் மைல்கல் தூரத்தில் அடித்து செல்லப்பட்ட யானையே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட வேக தாக்குதல் படகினால் இந்த யானை அடித்து செல்லப்படுவது முதலில் கண்கானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் யானையை காப்பாற்றுவதற்காக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றுமொரு தாக்குதல் படகு மற்றும் கடற்படை குழுவினரை விரைவாக அவ்விடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 2 செட்ரிக் கப்பல்களினால் 7 கடற்படை குழுவினர் யானையை காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் இணைந்துள்ளனர். அவர்களின் ஆலோசனைக்கமைய கடற்படையினரினால் யானையை காப்பாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர் பாரிய அளவிலான கயிறு பயன்படுத்தி ஆழ்கடலில் சிக்கியிருந்த யானையை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். யானையை புல்மூட்டை, யான்ஓய பிரதேசத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் எதிர்வரும் நடவடிக்கைகளுக்காக யானை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.