ஊழல் ஒழிப்பு குழு, எந்த திருடர்களையும் பிடிக்கவில்லை - ராஜித
ஊழல் ஒழிப்பு குழு செயலகத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செயலகத்திற்கு பல மில்லியன் ரூபா செலவிட்ட போதிலும் இதுவரை எந்த பிடிப்பட்ட திருடர்கள் எவருமில்லை எனவும் செயலகத்தை மூடுவதா இல்லையா என்பது அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
மிகப் பெரிய ஊழல் மோசடிகளை கண்டறியும் நோக்கில் இந்த செயலகம் ஆரம்பிக்கப்பட்டாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து மாத்திரமே அந்த செயலகம் ஆராய்ந்து வந்ததாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment