முந்திய ஆட்சி புலிகளை அழித்தது, இப்போது ஐ.எஸ். வளருகிறது - விமல்
புலிகளின் தலைகள் மீது, தாக்குதல் மேற்கொள்ள உதவிய புலனாய்வு பிரிவினர் அனைவரும் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்கையில்,
யுத்தத்தை வென்று கொடுத்த இராணுவத்தினரும், புலனாய்வுத்துறையும் தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவம் சேவை செய்தது அரசுக்காக அல்ல நாட்டுக்காகவே ஆனால் அவர்கள் இன்று பலிவாங்கப்படுகின்றார்கள். அதேபோன்று தேசிய பாதுகாப்பு இப்போது முற்றாக தளர்ந்து விட்டது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க சி.ஐ.ஏ வினர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான அவர்கள் இலங்கைக்கு விசாரணைக்காக வரவுள்ளனர்.
முன்னைய ஆட்சி விடுதலைப்புலிகளை நிறைவு செய்து வைத்தது இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் வளர்ந்து வருகின்றது. அப்போது 24 மணிநேரமும் நன்றான அவதானிக்கப்பட்டது. புலிகள் இல்லாதபோது ஐ.எஸ்.ஐ.எஸ் தேவையா?
விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக்கப்படுகின்றது என்பதனை அறிந்து கொண்டபோது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இப்போது புதுப்புது குழுக்கள் உருவாகிவிட்டன. வடக்கில் இரு மாறுபட்ட ஆணைகளுக்கு இடம் கொடுக்கவில்லை ஆனால் இப்போது வடக்கில் புதுப் புது அமைப்புகளும், குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
அவை தமிழ்மக்களின் வாழ்வையும் சேர்த்து அழித்துக் கொண்டு வருகின்றன. அப்போது வடக்கு பாதுகாப்பு தொடர்பில் சரியாக அவதானிக்கப்பட்டது. ஆனால் இப்போது முழு நாட்டிலும் அராஜகம் செய்யப்படுகின்றது.
வடக்கில் தற்போது புத்தர் சிலைகள் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. அந்த அளவிற்கு இந்த அரசு நாட்டை முறைகேடாக ஆட்சி செய்து வருகின்றது எனவும் விமல் தெரிவித்தார்.
Post a Comment