ஹிஸ்புல்லாவின் மறுபக்கம்..!
-Abdul Razak-
நான் கெளரவ ஹிஸ்புல்லாஹ் அவர்களுடன் 1987 முதல் 1996 வரை அரசியல் ஈடுபாடுகளுடன் இணைந்து வேலை செய்துள்ளேன்.
அதிலும் 91 முதல் 96 வரை அவரின் ஏறாவூருக்கான பிரத்தியேகச் செயலாளராக கடமையாற்றினேன். 1996 ம் ஆண்டில் அவருடன் ஏற்பட்ட பொது முறண்பாடு காரணமாக வெளியேறினேன்.
ஆனால், பொதுவாகவே அரசியல்வாதிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கின்ற முக்கியமான விடயங்களில் இவருக்கென ஒரு மறுபக்கம் இருக்கின்றதே என்பதை நானாகவே அறிந்து அதிசயித்ததுண்டு.
நான் இவரின் வீடுகளிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்குச் செல்கின்ற இடங்களிலும் தங்கியுள்ளேன். இவரின் காரில் நீண்ட தூரப்பிரயாணங்களையும் இவருடன் மேற்கொண்டுள்ளேன்.
அப்போதெல்லாம் நான் அவரின் இயல்புகளையும் குணாதிசயங்களையும் கண்டு வியந்ததுண்டு.
1-தஹஜ்ஜத் தொழுகையை தவற விடாதவராக இருந்தார்.
2-ஐந்து நேரத் தொழுகையை எச்சந்தர்ப்பத்திலும் தவறவிட்டதில்லை. காருக்குள் முஸல்லா இருக்கும். காரில் செல்லும்போது, வக்துடைய நேரம் வந்ததும் எதிரே வரும் பள்ளியில் விடுமாறு ட்றைவரிடம் சொல்லி விடுவார்.
சில நேரங்களில் கழாவாகக் கூடிய சாத்தியமிருந்தால் தெருவிலேயே தொழுவார். நானும் அவருடன் தொழுதுள்ளேன். அவருடன் தங்கியிருக்கும் சந்தர்ப்பங்களில் சுபஹுக்கு எழுப்பி, இமாமாக ஜமாஅத்தும் செய்வார்.
3-பாலியல் குற்றச்சாட்டுக்களற்ற ஒரு ஒழுக்க சீலர் என்பதை நான் அவதானித்துள்ளேன். இதனை அடித்துச் சொல்வேன்.
4- மது, சிக்கரட் இவருக்கு எட்டாப் பொருத்தம்.
ஒரு மனிதன் சுவர்க்கம் நஸீப்பாக இதைவிட என்ன வேண்டும் ? இப்படியொரு அரசியல்வாதியை இவ்வுலகில் காண்பதரிது. புலால் உண்ணாக் கொக்குகளும் உண்டு என்பதற்கு கெளரவ ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நல்ல உதாரணமாகும்.
இவர் மக்களுக்கு அபரிமிதமான சேவைகைளச் செய்கின்ற மகனாக மட்டுமல்ல அவரைப் பெற்ற பெற்றோருக்கு சுவர்க்கத்தை பெற்றுக் கொடுக்கும் உயர்ந்த மகனாகவும் இருக்கின்றார்.
இவர்தான் ஹிஸ்புல்லாஹ் !
அல்ஹம்துலில்லாஹ் !
Post a Comment