முஸ்லிம்களுக்கெதிராக யூத பாணியிலே, பொது பலசேனா இயங்குகிறது - பத்தேகம சமித தேரர்
சிங்களத்தில் : மஹேஷ் மலவர ஆரச்சி
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
இனவாதத் தூண்டுதலின் விளைவாக அண்மைக் காலங்களில் ஒருசில அசம்பாவிதங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இவற்றுக்கு பொதுபலசேனா மீதே விரல் நீட்டப்பட்டுள்ளது. மற்றும் சில தரப்புகள் வேறு விதமான கருத்துகளையும் முன்வைத்தன. மேற்படி விடயங்கள் தொடர்பாகவும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றியும் தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித தேரருடன் ‘அத’ சிங்கள மொழி ஊடகம் மேற்கொண்ட பேட்டியின் தமிழாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
அண்மையில் மதவாத மோதல்கள் சில தலைதூக்கின. இவற்றுக்குப் பலரும் பொதுபலசேனா மீது குற்றம் சுமத்தினர். இது குறித்து உங்கள் கருத்தென்ன?
பதில்: இந்த அரசு மறைமுகமாக அடிப்படை வாதிகளுக்கு வாய்ப்பளித்திருப்பதாகவே எங்களுக்குத் தோன்றுகிறது. இந்த அரசு செயலிழந்து செயற்படுவதை இந்நாட்டு சிங்கள பௌத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், ஆகிய சமூகத்தினரில் பெரும்பாலோனோர் உணர்ந்துள்ளனர். இது எல்லா அடிப்படை வாதிகளுக்கும் வாய்ப்பாக அமைந்து விட்டது. சிங்கள பௌத்த சக்தி மஹிந்த ராஜபக் ஷவின் பிடியில் இருக்கிறது. இதனை செயற்படுத்தும் ஓர் ஊடகமாக பொதுபலசேனா அமைப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரர் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: அவர் குறித்து எப்போதும் என் மனதிலே விமர்சனம் எழுந்த வண்ணமே உள்ளது. அவர் மீதான சந்தேகமும் எப்போதும் என் மனதில் ஊசலாடவே செய்கிறது. நாம் பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்து கட்டியெழுப்பியுள்ள சமாதான சூழ்நிலை வன்முறையைத் தோற்றுவிப்பதன் மூலம் மீண்டும் சின்னாபின்னமாகிவிடும். உலகம் முழுவதும் சர்வதேச யூத பயங்கரவாத சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே பொதுபலசேனா அமைப்பும் இன்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ முஸ்லிம்களுக்கெதிராக அதே யூத பாணியிலே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பொதுபலசேனா அமைப்பு மஹிந்த ராஜபக் இஷவின் காலத்திலும் இயங்கியது தானே?
பதில்: ஆம், இயங்கியதுதான். அதனால் தானே பேருவளை சம்பவம் இடம்பெற்றது. மஹிந்த ராஜபக் ஷவை தோல்வியடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியொன்றாகவே அதனை நாம் அன்று நோக்கினோம். சம்பந்தப்பட்ட பிக்குகளைத் தண்டிப்பதற்குக் கூட மஹிந்த முன்வரவில்லை. ஆனால் பிக்குகள் என்று பாராமல் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற ரீதியில் செயலாற்றும் படி நாம் அன்று மஹிந்தவைக் கேட்டுக் கொண்டோம். அதனை அவர் அமுல் நடத்தத் தவறியமையின் பிரதிபலனாக அவருக்குத் தேவையான வாக்குகளை அவர் இழந்தார்.
நன்றி – 'அத' பத்திரிகை
உண்மை உண்மை உண்மை தைரியமான உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறேன் எங்கள் சமுதாயம் சார்பில்
ReplyDeleteONE AND ONLY BUDDHIST BIKKU TO CALL A SPADE A SPADE.
ReplyDelete