Header Ads



ஞானசாரவை கைது செய்யாமல் இருக்க நீதியமைச்சர் நடவடிக்கை எடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ பற்றி விசாரணை

கலகொட அத்தே ஞானசாரவை கைது செய்யாமல் இருக்க நீதி   அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ பற்றி விசாரணை செய்யுமாறு கோரி ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் அவர்கள் போலீஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

ஞானசார அவர்கள் நீதி அமைச்சரை சந்தித்த போது அவ்விடத்தில் நின்ற  மாலிக் விஜேநாயக்க என்பவர் சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டுள்ள  வீடியோ சம்பந்தமாகவே வட்டரக்க விஜித தேரர்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

இன் நபர் கூறும் விடயம் சம்பந்தமாக துரித விசாரணை செய்து இச் சம்பவம் உண்மையானால் ஞானசாரவை கைது செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மேலும் கூறப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.