ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு, சமூகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா
ஹெம்மாத்தகமையின் கல்வியின் நூற்றாண்டு வெளியீடாக ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு என்ற நூல் எதிர்வரும் 08.07.2017 (சனிக்கிழமை )இல் அல்அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற ஏற்பாடாகி இருக்கின்றது.
ஹெம்மாத்தகமையில் முஸ்லிம்கள் குடியேறியதிலிருந்து அங்கு ஏற்பட்ட சமய கல்வி பொருளாதார மற்றும் நிருவாக வாழ்வியலைப் பற்றி இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மடுள்போவையில் ஆரம்பமாகி பின்னர் ஏழு ஊர்களாக வளர்ச்சி கண்டுள்ள இப்பிரதேசத்தின் சமய வாழ்க்கைக்குப் பங்களிப்புச் செய்த பெரியார்கள் மற்றும் கல்வித்துறையின் வளர்ச்சி பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக 1917 ஆம் ஆண்டு அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலை 2017 இல் நூற்றாண்டைக் கொண்டாடுகின்றது. இந்நிலையின் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பட்டதாரிகள் கலாநிதிகள் வைத்தியர்கள் கணக்காளர்கள் சட்டத்தரணிகள் என பல்வேறு துறைகளிலும் முன்னேற்றத்தைக் காண முடிகின்றது என்பதை விரிவாக இந்நூல் தருகின்றது.
ஹெம்மாத்தகமையின் ஆரம்பகால பட்டதாரி ஆசிரியரும் கல்வி நிருவாக சேவை அலுவலருமான எம்.எம். ராஸிக் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார் மத்திய பிராந்திய கல்வி ஆலோசகராகக் கடமையாற்றிய போது பெற்ற அனுபவமும் தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகவும் இலங்கைப் பாராளுமன்றத்தின் முதுநிலை சமகால உரைபெயர்ப்பாளராகவும் சேவை செய்துள்ள அவரது நூல் எதிர்வரும் 08ஆம் தேதி வெளியிடப்படும் விழாவில் முன்னா ள் பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் நூலைத் திறனாய்வு செய்யவுள்ளார். மேலும் எம்.ஏ.நுஃமான் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியரும் எம்.ஐ.எம்.அமீன் முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் சிறப்புரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
இவ்விழாவில் அமைச்சர்களான கௌரவ றவுப் ஹகீம் ( நீர்வழங்கல் நகரத்திட்டமிடல் அமைச்சர்)ää கௌரவ எம்.எச்.ஏ.ஹலீம் (தபால்ää தபால் சேவைகள் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சர்) கௌரவ கபீர் ஹாசிம் (அரச பொதுமுயற்சிகள் அமைச்சர்) கௌரவ ஏ.எச்.எம்.பவுசி தேசிய நல்லிணக்க ஒருங்கமைப்பு இராஜாங்க அமைச்சர் சிறப்பதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஹெம்மாத்தகமை முஸ்லிம்கள் ஒவ்வொருவரினது வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு நூல் என்ற எண்ணம் ஊர் மக்களிடம் காணப்படுகின்றமை நூலின் தரத்தையும் முக்கியத்தவத்தையும் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த நிகழ்வினை ஹெம்மாதகமை பிரதேச பள்ளிவாயல்கள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ளது. எனவே பிரதேசவாசிகள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்
Post a Comment