"ஜனாதிபதி மைத்திரிபால போன்று ஒருவர், மீண்டும் கிடைக்கமாட்டார்"
கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களை இணைத்துக் கொண்டு கட்சியின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைவதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் 18 உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானித்திருக்கலாம் என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று -19- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதியுடன் இருக்கும் அணியை சேர்ந்த எவரும் அவரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை போன்று ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கும் தலைவர் ஒருவர் அவர்களுக்கு மீண்டும் கிடைக்க மாட்டார்.
இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதியே போட்டியிடுவார்.
அமைச்சு பதவிகளை வழங்கினால், அரசாங்கத்தில் இணைய விரும்பும் ஏழு, எட்டு பேர் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கின்றனர் என இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment