பாங்கு சப்தத்தை, பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்க பயன்படுத்தும் காவிகள்
பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கல்வி நிலையங்கள்....!!
இந்தியாவின் அனைத்து துறைகளும் காவிமயமாகி வரும் சூழலில் கல்வித்துறையும் காவிமயமாகி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைத்து வருகிறது.
6 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் பள்ளிவாசலில் பாங்கு சொல்வது இரைச்சலை ஏற்படுத்துவாக கூறப்பட்டுள்ளது.
வாகனங்கள், ரயில், விமானங்கள் 24 மணிநேரமும் இயக்கப்படுவதால் அதிலிருந்து வரும் இரைச்சலும், ஒரு நாளைக்கு 5 முறை 5 நிமிடங்களில் சொல்லப்படும் பாங்கும் ஒன்றா ?
பட்டாசு என்ற பெயரில் அதிர்ச்சி சப்தம், இரைச்சல் சப்தம், புகை மண்டலம், காற்று மாசுபடுதல் என ஏராளமான தீங்குகளை கொண்ட பட்டாசை பற்றி பாட புத்தகத்தில் கூறப்படவில்லை.
மருத்துவமனை நோயாளிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தும் விதமாக மார்கழி மாதங்களில் கோவில்களில் பாட்டு சப்தமாக போட்டு தொந்தரவு செய்கிறார்கள். அதைப்பற்றி பாட புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை.
இறைவனை வணங்க அழைப்பு கொடுக்கும் பாங்கு சப்தம் இரைச்சலை ஏற்படுத்துவதாக பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முஸ்லிம் அமைப்பு ஒன்று புனேவிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து கடும் எதிர்ப்புகளுக்கு பின் சம்பந்தப்பட்ட பதிப்பகத்தார் இது எதிர்பாராமல் நடந்த தவறு என்று கூறி எதிர்கால பதிப்புகளில் இப்படத்தை எடுத்து விடுவதாகவும் கூறியுள்ளனர்.
Post a Comment