'பௌத்தம் அழிக்கப்படுகிறது, சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன'
குழப்ப சூழ்நிலை நாட்டில் உருவாகிவிட்டது, இந்த விடயம் தொடர்பில் விரைந்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதிக்கு அறியத்தர இருக்கின்றோம் என ஆனமடுவை தம்மனயஸ்சி தேரர் தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களின் தீர்மானம் குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,
வெவ்வேறு மதங்களும், இனங்களும் வாழும் இந்த நாட்டில் தற்போது குழப்பகரமான சூழல் உருவாகிவிட்டது.
தற்போது நாட்டில் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்பட்டு வரும் வேளையில், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.
அப்பாவி இராணுவ வீரர்களை தண்டிப்பதற்கு சாதகமான ஓர் சட்ட மூலம் நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. அந்த சட்டமூலமும் பொறுத்தமற்றது என நாங்கள் தீர்மானித்து விட்டோம்.
அதேபோல் புதிய அரசியல் யாப்பும் எந்த வகையிலும் பொறுத்தமற்றது எனவும் முடிவெடுத்துள்ளோம்.
மேலும், நாட்டில் தற்போது பௌத்தம் அழிக்கப்படுகின்றது. இந்த நாட்டின் பிரதான இனத்தவர்களான சிங்களவர்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
எனவே அவற்றிக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும், சிங்களவர்களை காக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளோம் எனவும் தம்மனயஸ்சி தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment