சாரதி அனுமதிப்பத்திரத்தில், சேர்க்கவுள்ள புதிய விடயம்
சாரதி அனுமதிப்பத்திரத்தில் உடலுறுப்புக்களைத் தானம் செய்ய விருப்பமா இல்லையா என்ற சாரதியின் விருப்பத்தை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரத்தை உருவாக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்மூலம், குறித்த சாரதி எவ்வகையான விபத்தில் உயிரிழக்க நேரிட்டாலும் அவரது உடல் உறுப்புக்களை தானமாக பெற்றுக்கொள்வதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
விபத்தின்போது உயிரிழக்க நேரிட்ட சாரதியின் சிறுநீரகம், இதயம், நுரையீரல், ஈரல் என்பவற்றை எடுத்து அவை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு பொருத்தி நோயாளிகளுக்கு ஒரு மறுவாழ்வைக் கொடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படும். அத்துடன், சாரதி அனுமதிப்பத்திரத்தில் இவ்விடயம் உள்ளடங்கியிருந்தால் இவற்றை மிகவும் விரைவாக மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆகவே, மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் இதை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment