கடும் வறுமை, அரிவாளை அடகுவைத்து பிள்ளையை வைத்தியசாலைக்கு கூட்டிச்சென்ற தந்தை
வரட்சியின் காரணமாக தொடர்ந்து நான்கு தடவைகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு கடும் வறுமை நிலைக்கு ஆளான விவசாயி ஒருவர் தனது அரிவாளை 300 ரூபாவுக்கு அடகு வைத்த சம்பவம் ஒன்று விலாச்சிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையிலும் தனது பிள்ளை கடும் சுகயீனமுற்றிருந்தமையாலும் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல பணம் இல்லாதிருந்த காரணத்தால் தான் விவசாயத்துக்கு பயன்படுத்திவந்த 800 ரூபா பெறுமதியான அரிவாள் ஒன்றை 300 ரூபாவுக்கு அடகு வைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு பணமில்லாமை காரணமாக விலச்சிய பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் கடனுக்கு உணவு பொருட்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதே வர்த்தகரிடம் சென்று, தனது அரிவாளை வைத்துக்கொண்டு தனக்கு 300 ரூபா பணம் தந்து உதவுமாறு குறித்த விவசாயி கோரியுள்ளார்.
ஏற்கனவே தனக்கு கடன் தரவிருப்பதனால் முதலில் கோபமடைந்து அவரை ஏசிய வர்த்தகர், பின்னர் அவர் மீது இரக்கம் கொண்டு அரிவாளை அவரிடமே திருப்பிக் கொடுத்து அவர் கேட்டபடி பணத்தையும் வழங்கியுள்ளார்.
எனினும், அந்த விவசாயி தான் பணத்தை திருப்பி தரும் வரையில் அரிவாள் தங்களிடமே இருக்கட்டும் எனக்கூறி அதனை பலவந்தமாக அந்த வர்த்தகரிடமே கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
எங்கே அப்ப போனார்கள் நல்லாட்சி !! ???
ReplyDelete