"விரைவில் அரசாங்கத்தை கவிழ்த்து, ஆட்சியை கைபற்றுவோம்"
நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகவும் புதிய கட்சியான பொதுஜன முன்னணி விரைவில் ஆட்சியை கைப்பற்றும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிதிராஜ பிரிவெனயில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஒரே நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயம் முற்றாக அழிந்துள்ளது.
டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு பிறகு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமே நாட்டில் இருந்து அரிசி மற்றும் சோளத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. தற்போதைய அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து அரிசி மற்றும் சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.
தாய்லாந்து பிரதமர் எனது நண்பர். நான் அவருடன் தொலைபேசியில் உரையாடினேன். முன்னர் எங்களிடம் அரிசி இருக்கின்றது வேண்டுமா என்று நாங்கள் வெளிநாடுகளிடம் கேட்பதுண்டு.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கூட தற்போது விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக விவசாய அமைச்சு வெளிநாடுகளில் இருந்து உணவை இறக்குமதி செய்கிறது.
இதன் காரணமாக நாங்கள் பொதுஜன முன்னணியை உருவாக்கினோம். மக்கள் அணி திரளுங்கள். விரைவில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்போம் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment